வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு துணை புரியும் ‘வைட்டமின்-சி’ உணவுகள்!

மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி நம்முடைய  உடல், தோல், தலைமுடி போன்றவற்றிற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்ப்போம்

NDTV Food  |  Updated: July 28, 2020 15:55 IST

Reddit
6 Vitamin-C Rich Foods For Strong Immunity And Healthy Skin Suggested BY FSSAI

Vitamin C-Rich diet helps in building immunity.

Highlights
  • Vitamin C nutrient is known to boost immunity.
  • FSSAI suggested 6 vitamin C-rich plant-based. foods.
  • Go through the list and these foods to your immunity-boosting diet.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்  நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வைட்டமின்-சி யை உள்ளடக்கிய ஆறு வகையான உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய துணுக்குகள்
❖    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்-சி முக்கியமாகும்.
❖    அதனை  உள்ளடக்கிய முக்கிய 6 உணவுகள் இவை.
❖    இதனை பின்பற்றி பயன்பெறுவோம்.

சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் முக்கிய அமைப்பாக  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. இது தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்  நிறுவனமானது சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், நம் உடல் நலத்தை மேம்படுத்துவதில் 
வைட்டமின்-சி முக்கிய பங்காற்றுவதாகக் கூறியது. இதனை அனைவரும் பின்பற்றுவதற்கான வழிக்காட்டுதலையும் வெளியிட்டுள்ளது. 

இந்நிறுவனம் பரிந்துரைத்த ஆறு உணவு வகைகள்:

1.நெல்லிக்காய்
    இதில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பாலிபினைல் என்னும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது. மேலும் நம் உடல் மற்றும் தோல் நலனுக்கும் இது உதவுகிறது. இதனை நாம் அன்றாட உணவில் ஊறுகாய் வடிவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

(Also Read: 5 Tips To Keep Fruits And Vegetables Clean According To FSSAI)

j2krqilo

Amla is good for hair and skin health. 

Image: istock

2.குடைமிளகாய்
     பொதுவாக இதனை பயன்படுத்தி பாஸ்தா, பிரைட் ரைஸ், சான்விச் போன்ற பலவிதமான உணவு வகைகளை சமைக்கலாம்.

3.ஆரஞ்சு
     இதனை தினசரி உண்பதன் மூலம் வைட்டமின் சி-யின் அளவை அதிகரித்து உடலுக்கு வலுசேர்க்கிறது.

4.கொய்யா
    இவை பெரும்பாலும் குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு அதிகப் பலன் கிடைக்கும்.

5.பப்பாளி
    இவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமல்லாது, ஆண்டின் எல்லா நாட்களிலும் கிடைக்கிறது. இவற்றின் பலனை நம்முடைய எதிர்ப்பு சக்திக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

6.எலுமிச்சை
    துரித உணவுகள் உண்பதை தவிர்த்து, எலுமிச்சைச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்து பலன்பெறலாம்.  

மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி நம்முடைய  உடல், தோல், தலைமுடி போன்றவற்றிற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்ப்போம்.

(Also Read: How To Keep Packaged Milk Clean Amid COVID-19?)

Listen to the latest songs, only on JioSaavn.com

nl2vqnso

Lemon is rich in vitamin C nutrient.

மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி நம்முடைய  உடல், தோல், தலைமுடி போன்றவற்றிற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்ப்போம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement