புதுச்சேரியில் நீங்க கண்டிப்பா செல்ல வேண்டிய 7 உணவகங்கள்

ரான்டேவூ  இங்கு முதலில் தொடங்கப்பட்டது, அதனை தொடர்ந்து சட்சாங்கா, போன்ற இடங்களுக்கு வெளிநாட்டவர் பலர் வர தொடங்கினர்.

   |  Updated: June 28, 2018 00:47 IST

Reddit
7 Amazing Restaurants To Try When You Visit Pondicherry
Highlights
  • ரான்டேவூ, முதலில் தொடங்கப்பட்ட உணவகங்களில் ஒன்று
  • • சட்சாங்கா, போன்ற உணவகங்களுக்கு வெளிநாட்டவர் பலர் வர தொடங்கினர்
  • பாரம்பரிய கட்டிட கலைகளை காண, சுற்றுலாவினர் அதிகம் வருகின்றனர்
சென்னையையும் புதுச்சேரியும் சேர்த்தது கிழக்கு கரை சாலை. இதுவே, எளிய வழியில் புதுச்சேரி நோக்கி சுற்றுலா மக்கள் பலர் செல்ல காரணமாக அமைந்த்து.  சுற்றுலா மக்கள் மட்டுமின்றி, சென்னை மக்கள் வார இறுதிகளில், நண்பர்களுடன் செல்லும் இடமாக மாறியது. ரான்டேவூ  இங்கு முதலில் தொடங்கப்பட்டது, அதனை தொடர்ந்து சட்சாங்கா, போன்ற இடங்களுக்கு வெளிநாட்டவர் பலர் வர தொடங்கினர். பிரெஞ்சு பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிட கலைகளை காண, சுற்றுலாவினர் அதிகம் வருகின்றனர். எனவே, இந்தியா முதல் சர்வதேச அளவில் அனைத்து வகை உணவுகளும் கிடைக்க கூடிய இடமாக புதுச்சேரி மாறிவருகிறது. இன்றைய நிலையில், ட்ரெண்டாக இருக்கும் சில இடங்களின் தொகுப்பு இங்கே.
Newsbeep
 
கோரமண்டல் கஃபே

புதுச்சேரியின் புதிய உணவு அருந்தும் இடமாக இருக்கும் கோரமண்டல் கந்பே, நூறு ஆண்டு கால பழைமையான பிரெஞ்சு இல்லம் - லே மேய்சன் ரோஸ் என்ற இடத்தில் உள்ளது. கஃபேயின் டிசைன்களை சென்னையில் தொடங்கப்பட்ட அமிதிஸ்ட் கஃபே  குழு செய்துள்ளது. கஃபே  உட்புற  அலங்கார வேலைகள், ஆத்தங்குடி டைல்ஸ் ஜோத்பூர் பர்னிச்சர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய உணவுகளில் இந்திய சுவை கலந்த உணவு வகைகள் கிடைக்கின்றன.

 

வில்லா சாந்தி
புதுச்சேரியில் உள்ள பல பிரெஞ்சு இல்லங்கள், உணவு விடுதிகளாக மாறி வருகின்றன. சில உணவகங்களில் காண்டினெண்டல் மற்றும் பிரெஞ்சு வகை உணவுகள் பரிமாறுகின்றன. வில்லா சாந்த்தியில் நிலையாக சுவையன உணவுகளை தயாரித்து வருகின்றன.  இறால் மற்றும் பொமெலோ சாலட் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஆல்மண்ட் கேக் மற்றும் சாக்கலேட் மெளசி புதுச்சேரியின் சிறப்பு உணவுகள் ஆகும்.
 

F.U.N ரெஸ்டாரன்ட், ட்யூன் ஈகோ வில்லேஜ் அண்டு ஸ்பா
35 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள தனியார் பீச்சில், பாரம்பரிய கட்டட கலையுடன். நவீன உட்புற அலங்காரங்கள் கொண்டா பங்களா, ட்யூன் கிராமத்தில் உள்ளது. புதுச்சேரியிலேயே, உணவு விடுதிகளில் செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படும் ஒரே இடமாகும். சுவையான ஆரோக்கியமான இயற்கை உணவுகளையே பரிமாறுகின்றன.அங்கு கிடைக்கும் தினை பிரியானி மிக சுவையானது.
 

மேய்சன் பெருமாள்
புதுச்சேரியின் தமிழ் பகுதிகளில், 130 ஆண்டுக்கால பழைமை வாய்ந்த, செட்டியார் மேன்சனாக இருந்த இடம் தற்போது பிரெஞ்சு பகுதியில் உள்ளது,  சுவையான தமிழ் உணவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. அதுமட்டுமின்றி, விடுதியில் தங்கி இருக்கும் விருந்தினர்கள், உணவகத்தின் செஃப்புடன், கோபர்ட் சந்தைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. மீன் மற்றும் மிளகு காளான், இந்த உணவகத்தில் சுவைக்க வேண்டிய இரண்டு உணவுகள்

 

ஆரோவில் பேக்கரி மற்றும் ரெஸ்டாரண்ட்

Listen to the latest songs, only on JioSaavn.com

சுவையான காலை உணவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அரோவில்லின், புகழ்பெற்ற சுவையான பேக்கரி உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.க்ராய்சண்ட்ஸ் மற்றும் ஆம்லெட்டுகள் இங்கு சுவையான காலை உணவுகளில் ஒன்றாகும். மேலும், இங்கு கிடைக்கு ப்ரெட், இலவங்கபட்டை ரோல், வால்னட் பிரவுனீஸ் ஆகியவை மிகவும் சுவையானது.   
 
 

A post shared by Ritwik Dey (@ritwikdey13) onலே டுப்ளெக்ஸ்
18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம், புதுச்சேரி மேயரின் குடியிருப்பாக கட்டப்பட்டுள்ளது. பின்னர், பொட்டிக் உணவகமாக மாற்றப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் மத்திய கூடாரப் பகுதியை உணவகமாக மாற்றியுள்ளனர். இங்கு, இந்திய உணவுகள், பாஸ்டா என அனைத்து வகைகளும் உள்ளன. ‘புதுச்சேரி ஃப்யூஷன் க்யூசேன்’ என்ற பகுதியில், தேங்காய் பால் கலந்த ரசம், இறால் மற்றும் நெத்திலி வகையில் இந்திய மசாலாக்கள் சேர்க்கப்பட்டு பரிமாறுகின்றன.
 
 

A post shared by Kadeeja (@kadeejarafeeq) on


சர்குரு
கஃபேகளில் இருந்து வேறுபட்டு, காண்டினெண்டல் க்யூசைன் விரும்புபவர்கள், சர்குரு செல்ல வேண்டும். ஃபில்டர் காபி, சுவையான காலை மற்றும் மாலை உணவுகளுக்கு சரியான இடமாக அமையும். அதுமட்டுமின்றி, தெனிந்திய உணவுகளான தோசை, சாம்பர், வடை கிடைக்கின்றன. புதுச்சேரியில், சர்குருவிக்கு நிறைய கிளைகள் உள்ளன. பிரெஞ்சு பகுதியில் இருந்தால்,ஜவஹர்லால் நேரு தெரிவில் இருக்கும் உணவகம் அருகில் இருக்கும்.

Comments 
 

A post shared by Mayuri kunigiri (@pataka.life) on

 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement