மற்றவர்களுக்கு நல்லது, சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாத 7 உணவு வகைகள்

நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

Sushmita Sengupta  |  Updated: August 06, 2018 18:24 IST

Reddit
7 'Healthy Foods' That Diabetics Are Advised To Avoid

சர்க்கரை நோய் இந்தியாவில் சகஜமாகி வரும் நோயாகிவிட்டது. நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்க்கரை நோய்க்கு முழுமையான தீர்வு இன்னும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தான் வழிமுறைகள் உள்ளன. மருந்துகளை தாண்டி உணவு முறைகளும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். எவற்றை சாப்பிடலாம் என்று பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எவற்றை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, பழங்களில் எவற்றை எல்லாம் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

காய்ந்த திராட்சை:

சாதாரண பழங்களில் இருப்பதை விட உலர் பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். திராட்சையில் 27 கிராம் கார்போஹைட்ரேட்கள் இருக்கிறது என்றால், காய்ந்த திராட்சையில் 115 கிராம்கள் இருக்கும். எனவே காய்ந்த திராட்சையை தவிர்ப்பது நல்லது.
 

raisins

தர்பூசணி:

சர்க்கரை அளவை குபீர் என ஏற்றிவிடும் தன்மை கொண்டது தர்பூசணி. இதன் கிளைசீமிக் இண்டெக்ஸ் 72. இது மிக அதிகமாகும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், தர்பூசணி பக்கம் தலை வைக்காதீர்கள்.

watermelons seeds superfoods

உருளைக் கிழங்கு:

உருளைக் கிழங்கில் பல நன்மைகள் உள்ளன. ஆனால், அவற்றில் இருக்கும் அதிக கார்போஹைட்ரேட்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

potatoes

மாம்பழம்:

மாம்பழத்தில் அதிக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. அதை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய பழம் இது.

mangoes

சப்போட்டா பழம்:

அதிக சர்க்கரை அளவு கொண்டது. அதிக கிளைசீமிக் இண்டெக்ஸ் கொண்டது. சர்க்கரை நோயாளிகளின் உணவில் இது நிச்சயம் இருக்கக் கூடாது.
 

chikoo

முழூ கொழுப்பு கொண்ட பால்:

பால் அனைவருக்குமான உணவு என்று கூறப்படுகிறது. ஆனால் முழு கொழுப்பு கொண்ட பாலை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அதில் அதிக கொழுப்பு உள்ளது. இது இன்சுலினின் எதிர்ப்பு சக்தியை இன்னும் மோசமாக்கும். குறைந்த கொழுப்பு அல்லது ஆடை நீக்கிய பாலை பருகலாம்.
 

 
df4n4mvo

பழச்சாரு:

பழச்சாருகளுக்கு பதில் பழங்களாக உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. பழங்கள் சாப்பிடுவது நார் சத்தை உடலுக்கு கொடுக்கும். பழச்சாரு மட்டும் பேக் செய்யப்பட்ட சாரு வகைகளில் ஃபிரக்டோஸ் சேர்க்கப்படும். இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement