வீட்டிலேயே செய்யக்கூடிய புதினா ரெசிபிகள்!!

புதினாவை சாப்பிடுவதால் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் சளி தொந்தரவு நீங்கிவிடும்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 11, 2019 16:56 IST

Reddit
7 Best Mint Recipes To Prepare At Home

இந்திய உணவுகளில் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு சட்னி.  ஆரோக்கியம் நிறைந்த சட்னிகளுள் புதினா சட்னியும் ஒன்று.  புதினாவில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் செரிமானம் தூண்டப்படுகிறது.  புதினாவை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடைகிறது.  புதினாவின் மேலும் சில நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

செரிமானம்: 
புதினாவில் மென்தால் என்னும் ஆக்டிவ் எண்ணெய் இருக்கிறது.  இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை இருக்கிறது.  இது செரிமானத்தை சீராக்கி, வயிறு சம்பந்தமான நோய்களை போக்குகிறது.  

சளி: 
சளி தொல்லையால் முச்சுத்திணரல் அதிகமாக இருக்கும்.  புதினாவை சாப்பிடுவதால் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் சளி தொந்தரவு நீங்கிவிடும்.  புதினாவில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட இருமல் குணமாகும். 

உடல் எடை: 
புதினா உடல் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி உடல் எடை குறைக்க உதவுகிறது.  செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை சுரக்க செய்து உடலில் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவுகிறது.  

சரும பராமரிப்பு: 
புதினாவை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால், சருமத்தில் பருக்கள் வராது.  சருமத்திற்கு சிறந்த க்ளென்சராக பயன்படும் புதினா இளமை தோற்றத்தை அள்ளித்தருகிறது.  புதினா கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபிகள் சிலவற்றை பார்ப்போம்.  

Comments

mint lassi புதினா லஸ்ஸி: 
கோடைக்காலத்திற்கு ஏற்ற குளிர்பானம்.  தயிர், சர்க்கரை, புதினா, சீரகம் ஆகியவை சேர்த்து அரைத்து லஸ்ஸியாக குடிக்கலாம்.  இது உங்கள் வயிற்றுக்கு சிறந்த க்ளென்சராக செயல்படும்.  
lemonade புதினா கிவி லெமனேட்: 
கிவி மற்றும் புதினா ஆகிய இரண்டுமே குளிர்ச்சி நிறைந்தது.  புதினா, எலுமிச்சை, கிவி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி கோடைக்கு ஏற்றது.  
pannacota மிண்ட் பன்னகோட்டா: 
இந்த இத்தாலியன் டெசர்ட் ரெசிபி, பால், க்ரீம், தேன், வென்னிலா எசன்ஸ் மற்றும் ஜெலட்டின் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த டெசர்ட் ரெசிபி உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.  
pqfhkbr4
 மஞ்சள் புதினா சட்னி: 
புதினா, மஞ்சள், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சட்னி செய்து சாப்பிடலாம்.  இந்த சட்னி ஆரோக்கியத்துடன் ஊட்டச்சத்தையும் தருகிறது.  காலை அல்லது இரவு உணவாக இதனை சாப்பிடலாம்.  
pudina rice புதினா சாதம்: 
புதினா விழுது, சீரகம், எலுமிச்சை ஆகியவை சேர்த்து சாதத்துடன் சேர்த்து புதினா சாதம் செய்து சாப்பிடலாம்.  இந்த ரெசிபியை மதிய உணவாக சாப்பிட நன்றாக இருக்கும்.  
1gq1191o நாவற்பழம் புதினா பாப்ஸிகில்: 
நாவல்பழம், புதினா, எலுமிச்சை, சர்க்கரை ஆகியவை சேர்த்து பாப்ஸிகில் மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பின் சாப்பிடவும்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸாக இருக்கும்.  
jucgdl5
 
க்ரில்டு சிக்கன்: 
புதினா, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து சிக்கனில் தடவி க்ரில் செய்து சாப்பிடலாம்.  இத்துடன் காய்கறிகள் சாலட் சேர்த்து சாப்பிடலாம்.  இந்த ஜூஸி சிக்கன் சாப்பிட ருசியாக இருக்கும்.  


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement