மதிய உணவை சுவாரஸ்யமாக்கும் 8 புதிய ரெசிப்பி

சோர்வான நாளாக இருந்தாலும் கூட, மதிய உணவின் ஆற்றல் அந்த நாள் முழுவதையும் கடக்க உதவும்.

Sushmita Sengupta  |  Updated: June 28, 2018 18:56 IST

Reddit
8 Interesting Lunchbox Ideas to Make Your Lunch Breaks Fun
Highlights
  • ஆரோக்கியமான மதிய உணவு நாள் முழுவதற்குமான ஆற்றலை அளிக்கும்
  • விருப்பமான ஊட்டச்சத்து கொண்ட மதிய உணவு எடுத்து கொள்ள வேண்டும்
  • மதிய உணவு வகைகளை புதிய ரெசிபிகள் முயற்சி செய்யலாம்

சோர்வான நாளாக இருந்தாலும் கூட, மதிய உணவின் ஆற்றல் அந்த நாள் முழுவதையும் கடக்க உதவும். நான்காவது வகுப்பு வந்தவுடன் மதிய உணவு நேரத்திற்கு காத்திருந்தது பள்ளிக்கூட நினைவுகளில் மறக்க முடியாதவை. வழக்கமான உணவு வகைகளுக்கு நடுவில், புதிய வகைகளை முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஊட்டச்சது நிறைந்த எளிதாக செய்ய கூடிய சுவையான உணவு வகைகளின் தொகுப்பு இங்கே.

மெக் அன் சீஸ் மப்பின்ஸ்

கடைகளில் இருந்து மப்பின்கள் வாங்கி, அதனுள் மெக் அன் சீஸ், மூட்டை, பிரட் தூள்கள் ஆகியவற்றை சேர்த்து சுட வேண்டும். 25 முதல் 35 நிமிடங்கள் சமைக்க வேண்டும். பிறகு, குளிரூட்டி பேக் செய்ய வேண்டும். இதன் கூடவே, சிக்கன் ஹாம் சேர்த்து சாப்பிடலாம்.
 

 

A post shared by Sarah (@dasknusperstuebchen) on


ப்ரூட்டி ரோல்விச்சஸ்

குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய இந்த ரோல்விச்சஸ், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுவையானதாகவும் உள்ளது. பிரெட் துண்டுகளை, ஜாம், வெண்ணெய், சாக்குலேட் ஹேசல்நட் ஆகியவற்றை சேர்த்து, மாம்பழ துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள் மேலே வைத்து ரோல் செய்தால், ரோல்விச்சஸ் தயார்.

சிக்கன் சீசர் ராப்ஸ்

கீரை இலைகளின் மேல், க்ரில் சிக்கன், சீஸ், நறுக்கப்பட்ட பூண்டு, சாஸ் ஆகியவற்றை சேர்த்து ராப் செய்தால், சுவையான சிக்கன் ராப் தயார். எளிதாகவும் செய்ய கூடியாவை, சுவையாகவும் இருக்கும்.

 

A post shared by Ricks Cafe (@ricks.cafe) on

மினி வெஜ்ஜீ டார்டீலியா ரோல் அப்ஸ்

டார்டீலியா பேப்பரில் தயிர், காய்கறிகள் சேர்த்து ரோல் செய்து, மதிய உணவுக்கு சாப்பிட்டால், ஊட்டச்சத்து அதிகம் நிறைந்ததாக காணப்படும். சீஸ் சேர்த்து ரோல் செய்தால், இன்னும் சுவை கூடும்

 

A post shared by Marie (@marimaines) on

மிக்ஸ்டு பீன் ரைஸ் சாலட்

பீன்ஸ், பட்டானி ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து, சிறிது மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அதிக புரதச்சத்து கொண்ட மதிவு உணவு தயார்.

 

A post shared by Kaleo (@mekealoha13) on

சுச்சினி லசாக்னா

இத்தாலி நாட்டு உணவு வகையான லசாக்னாவில், வழக்கமான லசாக்னா உபயோகிப்பதற்கு பதிலாக, சுச்சினி துண்டுகளை பயன்படுத்தி செய்யப்படுகின்றன. பூண்டு, தக்காளி, பசில் சாஸ் சேர்த்து சுவையான லசாக்னா உண்ணலாம்

க்ரீக் பாஸ்டா சாலட்

ஒரு கப் பாஸ்தாவில், நறுக்கப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகள், பூண்டு, சீஸ், தக்காளி, மிளகு, ஆலிவ், சிறிதளவு உப்பு சேர்த்து தயாரித்தால், பாஸ்டா தயார்.

 

A post shared by Amber B. (@ablackm2) on

சீஸ் சில்லி தோசை

Commentsதென்னிந்திய உணவு வகைகளின் புகழ்பெற்றது தோசை. அதில் சீஸ் சேர்த்து வித்தியாசப்படுத்தலாம். தோசை மாவில், சீஸ், சில்லி ப்ளாக்ஸ் சேர்த்து, சிறிது நன்கு நறுக்கப்பட்ட வெங்காயம் தக்காளித் துண்டுகள் சேர்த்து, சீஸ் சில்லி தோசை தயாரிக்கலாம். ஊட்டச்சத்து நிறைந்த தோசையாக அமையும்.
 


 

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement