ஆயுர்வேத முறைப்படி நீங்கள் பின்பற்ற வேண்டிய 9 உணவு பழக்கங்கள்

இயற்கை மூலிகைகள், உணவு பழக்கம், யோகா பயிற்சி ஆகியவற்றை ஒருவன் வாழ்வில் தவறாமல் கடைப்பிடிப்பானாயின், அவன் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

Sushmita Sengupta  |  Updated: September 22, 2018 15:59 IST

Reddit
9 Incredible Eating Habits According To Ayurveda You Should Adopt Today
Highlights
  • ஆயுர்வேத மருத்துவம் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களால் பின
  • உலகெங்கிலும் ஆயுர்வேத முறைப்படி எப்படி உடல் உபாதைகளை சரி செய்வது என்று பல
  • நின்று கொண்டிருக்கையில் நீர் அருந்துவது அல்லது உணவு உண்பதை தவிர்க்க வேண்ட

ஆயுர்வேத மருத்துவம் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இயற்கை மூலிகைகள், உணவு பழக்கம், யோகா பயிற்சி ஆகியவற்றை ஒருவன் வாழ்வில் தவறாமல் கடைப்பிடிப்பானாயின், அவன் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். ஆரோக்கியமான உடலுக்கும் உடல் எடைக்கும், சரியான உணவு பழக்கங்களை பின்பற்றுவது அவசியம். உலகெங்கிலும் ஆயுர்வேத முறைப்படி எப்படி உடல் உபாதைகளை சரி செய்வது என்று பல ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒட்டு மொத்த உடல் நலனுக்கு முதலில் நாம் நம் உணவு பழக்கத்தை மாற்றுவதற்கான ஒன்பது வழிகளை பார்ப்போம்.

1. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது

உணவு பழக்கத்தை மாற்றும் போது தண்ணீருக்கு தான் முதல் இடம். நின்று கொண்டிருக்கையில் நீர் அருந்துவது அல்லது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது, அந்த நீரானது நம் மூட்டுகளில் தேங்கும் அபாயம் அதிகம். இதன் விளைவாக ஆர்த்ரிடிஸ் வரக்கூடும். மேலும் சிறுநீரகத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அதனால், ஆயுர்வேத முறைப்படி உணவு மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டையும் உட்கார்ந்து தான் உட்கொள்ள வேண்டும். உணவை அவசர அவசரமாக உண்ணக்கூடாது. தண்ணீர் உணவு, இரண்டையுமே மிகவும் மெல்லமாக நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
 

drink water

நின்று கொண்டிருக்கையில் நீர் அருந்துவது அல்லது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.  

2. பருவநிலைக்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ள வேண்டும்

கோடை மற்றும் குளிர் காலங்களில் நமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை இந்த இயற்கையே உற்பத்தி செய்து கொடுக்கிறது. பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை உண்ணும்போது, நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உதாரணமாக, நெய் மற்றும் வெல்லம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள். இவற்றை குளிர்காலத்தில் சாப்பிடலாம். தயிர் குளிர்ச்சி தன்மையுடையது. இதனை குளிர்காலத்தில் சாப்பிடும்போது, தொண்டை பகுதியில் சளியை உற்பத்தி செய்யும். அதனால் அந்தந்த பருவக்காலத்திற்கு தகுந்த பழங்களை சாப்பிடும்போது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

vegetables

கோடை மற்றும் குளிர் காலங்களில் நமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை இந்த இயற்கையே உற்பத்தி செய்து கொடுக்கிறது. 

3. பருவநிலைக்கு ஏற்றவாறு உணவு உட்கொள்ள வேண்டும்

கோடை மற்றும் குளிர் காலங்களில் நமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை இந்த இயற்கையே உற்பத்தி செய்து கொடுக்கிறது. பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை உண்ணும்போது, நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உதாரணமாக, நெய் மற்றும் வெல்லம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் உணவுகள். இவற்றை குளிர்காலத்தில் சாப்பிடலாம். தயிர் குளிர்ச்சி தன்மையுடையது. இதனை குளிர்காலத்தில் சாப்பிடும்போது, தொண்டை பகுதியில் சளியை உற்பத்தி செய்யும். அதனால் அந்தந்த பருவக்காலத்திற்கு தகுந்த பழங்களை சாப்பிடும்போது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

thali

 பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறி அதிகப்படியான உணவு உட்கொள்வதும் தவறு.

4. உணவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

சாப்பிடும் போது, டிவி, ஃபோன் அல்லது செய்தித்தாள் படிப்பதை தவிர்த்திடுங்கள். வேறொன்றில் கவனம் செலுத்தி கொண்டு உண்ணும்போது, நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை மறந்து போவீர்கள். நாம் வாழ்வதற்கு உணவு இன்றியமையாத ஒன்று. அவற்றை நாம் பெருமளவு மதிக்க வேண்டும்.

5. மெதுவாக சாப்பிட வேண்டும்

உணவை ரசித்து ருசிக்க வேண்டும். உணவை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலரிடம் இருக்கும். இது முற்றிலுமாக தவறு. உணவை நன்கு மென்று கூல் போல் உண்ண வேண்டும். இதனால், செரிமானத்திற்கு தேவையான என்சைம்கள் சுரக்கப்பட்டு உணவு எளிதில் செரிக்கிறது. சரியாக மென்று சாப்பிடாவிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் உடல் எடை கூடும்.

6edftnm

6. வெதுவெதுப்பான நீரில் அருந்தவும்

காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் அருந்தும் போது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடல் எடை குறையவும் செய்கிறது. மேலும் காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். உடலின் உள்ளுறுப்புகள் சிறப்பாக செயல்படும்.

7. உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்

நம் மன அழுத்தம், பொறுப்புகள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடும்போது, நம் கவனம் சிதறும் மேலும் நன்றாக உணவை மென்று சாப்பிட மாட்டோம். சப்பளங்கால் போட்டு உட்காரும்போது, செரிமானம் சீராகும். வாயுப் பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான உணவை உட்கொண்டோம் என்ற திருப்தி இருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

8. பசி உணர்வை தூண்ட வேண்டும்

சில நேரங்களில் பசி உணர்வில்லாமல், வயிறு உப்புசமாக இருப்பதை போல் உணர்வோம். அப்படியான சமையங்களில், ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சியில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது உமிழ் நீர் சுரப்பியை தூண்டுவதோடு, செரிமானத்திற்கு தேவையாக என்சைம்களை உற்பத்தி செய்யும். மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கக்கூடிய சத்துக்களை உடலில் தக்கவைக்கிறது.

9. சில உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது

சில உணவுகளை நமக்கு தெரியாமலே சேர்த்து சாப்பிடுவோம். அவை நம் உடலில் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, தேன் – நெய், பால் – முட்டை, தயிர் – புளிப்பு பழங்கள், பால் – வாழைப்பழம் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை உடல்நலக் கோளாறுகள் ஏற்பட காரணமாய் அமைகிறது.

Comments

curd rice
சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது, அவை நம் உடலில் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.  


About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement