சவுக்கார்ப்பேட்டையில் செம ட்ரீட் தரும் 8 உணவகங்கள்

பிற மொழிக்கு | Read In

  |  Updated: July 02, 2018 18:15 IST

Google Plus Reddit
A Food Trail In Chennai's Sowcarpet
Highlights
  • உண்மையிலே ஜார்ஜ் டவுனில் தான் சென்னை ஆரம்பித்தது
  • சென்னையில் பழமையான மற்றும் பிஸியான இடங்களில் ஒன்று ஜார்ஜ் டவுன்
  • நகரத்தின் பரபரப்பான பொருளாதாரம் வர்த்தகர்களை ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது
நீங்கள் எப்போதாவது நீயூயார்க் நகரின் மன்ஹாட்டனில் நடந்து சென்றீர்கள் என்றால் அந்த உள்ளூர் மக்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். நீயூயார்க் வாசிகளுக்கு மெதுவாக செல்கின்றவர்களைப் பிடிக்காது. சென்னையின் பழமையான மற்றும் பிஸியான இடங்களில் ஒன்றான ஜார்ஜ் டவுனிலும் இதே தான் நிலைமை. உண்மையிலே ஜார்ஜ் டவுனில் தான் சென்னை தொடங்குகிறது, ஜார்ஜ் டவுன் பகுதி பல பிஸியான தெருக்களின் அடுக்கு. அங்கு ஒவ்வொரு தெருக்களும் ஒரு பொருள் அல்லது வர்த்தகத்தில் தனித்துவம் பெற்றது. இது கிட்டத்தட்ட 19ம் நூற்றாண்டின் லண்டன் நகரைப் போன்றது. நகரத்தின் பரபரப்பான பொருளாதாரம் வர்த்தகர்களுக்கு ஈர்க்கும் அம்சமாக இருந்தது: இங்கே புலம்பெயர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்த மார்வாரி வர்த்தகர்கள் - சில குடும்பங்கள் இரண்டு நூற்றாண்டுகளாக மதராஸில் வசித்து வருகின்றனர். இந்த சமூகங்கள் சென்னையின் சமையல் கலாசாரத்தில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.கூட்ட நெரிசல் மிகுந்த ஜார்ஜ் டவுனில் ஒரு பகுதியான சவுகார்பேட்டை செல்வது ஒரு தனி அனுபவம். பரபரப்பான தெருக்கள், இரண்டு பைக் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய சந்துகள், கடை ஜன்னல்களில் தொங்கும் பல வண்ண சேலைகள் மற்றும் சென்னையின் மிகவும் இனிமையான தெரு உணவுகள் இவை அனைத்தும் இங்கு இருக்கின்றன. இங்கு பார்க்கிங்கிற்கு இடம் கண்டுபிடிப்பது எளிதல்ல, இந்த தெருக்களில் நடப்பதே ஒரு கலை, சந்தேகம் எழுந்தால் உள்ளூர்காரர்களை கவனியுங்கள். ஆனால் இந்த தனித்துவமான உணவு பயணத்தில் இருக்கின்ற சிறு சவால்கள் இவை. இந்த உணவு பயணத்தை நீங்கள் மாலை 4:30 - 5:00 மணிக்குள்ளாக தொடங்குவது சிறந்தது. இதற்கு உங்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை தேவைப்படும், இரவு உணவு பற்றிய கவலை வேண்டாம். சவுக்கார்பேட்டையில் தவர் விடக் கூடாத உணவகங்கள் இங்கே.

மாயா சாட்ஸ்: ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட இந்த உணவகத்தில் சென்னையின் சுவையான கச்சோரி கிடைக்கிறது. இதில் இரண்டு வகைகள் பிரபலமாக உள்ளது. நான் உங்களை இரண்டையுமே முயற்சி செய்ய பரிந்துரைப்பேன். காரமான ஆனியன் கச்சோரி உள்ளது, ஆனால் எனக்கு பிடித்தமானது இனிப்பு கச்சோரி தான்.

இடம்: ஆடியப்ப நாயக்கன் தெரு
 
chennai maya

மகாராஜா ஐஸ்க்ரீம்: மாயா சாட்ஸ் அடுத்துள்ள இந்த ஐஸ்க்ரீம் கடையில் சுவையான ஹோம் மேட் ஐஸ்க்ரீம்ஸ் மற்றும் குல்ஃபிக்கல் கிடைக்கின்றன. அதன் மாங்காய் மற்றும் ஆரஞ்சு ஐஸ்க்ரீம்கள் தான் அதிக விற்பனைய பெறுகின்றன.

இடம்: ஆடியப்ப நாயக்கன் தெரு
 
maharaja ice cream chennai

அஜ்னாபி மித்தாய் கர்: நகரைச் சுற்றி பல கிளைகளை வைத்திருக்கும் சென்னையின் மிகவும் பழமையான உணவு பிராண்ட்களுள் ஒன்று. இவர்கள் புதுமையான தயாரிப்பான காக்ரா சாண்ட்விச், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ப்ரெட் வடிவ காக்ராவில் சீஸ் சேர்த்து அதன் மேல் ஒரு ஃபில்லிங் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இடம்: யானைக் கவுனித் தெரு
 
khakra sandwich at ajnabi

காக்டா ராம்பிரசாத்: இவர்களுடைய கேசர் பாதாம் பால் மிகவும் பிரபலமானது. இவர்கள் சமீபத்தில் தங்களுடைய இரண்டாவது கடையை கீழ்பாக்கத்தில் தொடங்கியிருக்கின்றனர், இருந்தாலும் சவுக்கார்பேட்டையில் கூட்டம் அதே அளவில் தான் இருக்கின்றது. அவர்களுடைய பாதாம் பால் மற்றும் சூடான ஜிலேபி தவிர்த்து சுவையான தயிரில் பன்னீர் வைத்து செய்யப்படும் ஆலு டிக்கி தான் மிகவும் பிரபலம்.

இடம்: மிண்ட் தெரு
 
chennai kakda

அன்மோல் லஸ்ஸிவாலா: காக்டாவிற்கு அடுத்த கடையான அன்மோல் லஸ்ஸிவாலா சென்னையின் அதிகம் பிரபலமான லஸ்ஸி கடைகளில் ஒன்று. இவர்களுடைய லஸ்ஸி கேசர் சுவையில் இருக்கும். இவர்களுடைய சிறிய வகை லஸ்ஸி கூட சவுகார்பேட்டை உணவு பயணத்தின் மத்தியில் சிறப்பாக இருக்கும்.

இடம்: மிண்ட் தெரு
 
anmol lassi chennai

நாவல்டி டீ ஹவுஸ்: நீங்கள் அதிர்ஷடசாலியாக இருந்தால் இந்த சவுகார்பேட்டை குறுகிய சந்துகளுக்கு இடையே ஒரு அற்புதமான உணவு பயணம் அமையும். சென்னையின் சூடான மதிய பொழுது ஒன்றில் இந்த கடையின் ரோஸ் மில்க் மற்றும் பான் ஐஸ்க்ரீம் இதமளிக்கும். ஆனாலும் வெண்ணெய் நிறைந்த பாவ் பாஜி தான் அனைத்திலும் பெஸ்ட்.

இடம்: மிண்ட் தெரு
 
novelty tea house chennai

எஸ் சின்னப்பா சாண்ட்விச் சென்டர் முறுக்கு சாண்ட்விச்: கிளாசிக் பாம்பே சாண்ட்விச் தான் எங்கும் பிரபலம் என்றாலும் அதுபோலவே புதுமையாக செய்யப்படும் சிலவகை சாண்ட்விச்களும் இருக்கின்றன. முறுக்குடன் சிறிய வெள்ளரி, தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றுடன் மிளகாய் சட்னியும், கொண்டைக் கடலையும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது போன்று பல சுவையான உணவுகளை வழங்கக்கூடிய கடைகள் சவுக்கார்பேட்டையில் இருக்கின்றன.

இடம்: என்எஸ்சி போஸ் ரோட்
 
murukku sandwich chennai
 
சீனா பாய் டிப்பன் செண்டர்: சவுக்கார்பேட்டையில் சாட் வகைகள் மற்றும் பிரபலம் இல்லை. சவுக்கார்பேட்டை வந்தால் சீனா பாய் கடையை இறுதியாக வைத்துக்கொள்ளுங்கள் - 6:30 மணிக்கு தான் இந்த கடை திறக்கப்படுகிறது. இவர்களுடைய இட்லி மற்றும் மிருதுவான எண்ணெய் ஊத்தாப்பம் தகுந்த இரவு உணவாக அமையும்.

Commentsஇடம்: என்எஸ்சி போஸ் ரோட்
 
seena bhai tiffin centre chennai


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement