அடை ரெசிபி: வீட்டிலேயே இந்த சத்தான சுவையான உணவை எப்படி செய்வது

நீங்கள் அருந்தும் உணவில் மிகச் சத்தான உணவு ஒன்று இந்த அடை. இது மிகவும் பிரபலமான தமிழ்நாட்டு உணவு வகையை சேர்ந்தது. சாம்பார் சட்னி உடன் அருமையாக இருக்கும்.

Sarika Rana  |  Updated: August 24, 2018 21:43 IST

Reddit
Adai Recipe: How To Make This Nutritious Delicacy At Home

நீங்கள் அருந்தும் உணவில் மிகச் சத்தான உணவு ஒன்று இந்த அடை. இது மிகவும் பிரபலமான தமிழ்நாட்டு உணவு வகையை சேர்ந்தது. சாம்பார் சட்னி உடன் அருமையாக இருக்கும்.

தயாரிப்பு நேரம்: 2 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
சர்விங் : 6

தேவையான பொருட்கள்:

 • 1/2 கப் துவரம் பருப்பு
 • 1/2 கப் சன்னா தால்
 • 4 டீஸ்பூன் உளுந்து
 • 1/2 கப் அரிசி
 • 1/2 கப் அரிசி வேகவைத்தது
 • 2 வெங்காயம்
 • இஞ்சி
 • 4 - 5 சிவப்பு மிளகாய்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
 • உப்பு சுவைக்கேற்ப
 • கறிவேப்பிலை
   
dosa

செய்முறை:

1.2 மணி நேரம் சிவப்பு மிளகாய் கொண்டு அனைத்து பருப்பு வகைகளையும் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து கொள்ளவும். ஒரு தனி பாத்திரத்தில் ஊறவைத்த அரிசியை கொதிக்க வைக்கவும்.
2.ஒரு கிரைண்டர்யில் ஊறவைத்த பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய்களை கோர கோர வென அரைத்துக்கொள்ளவும் .
3.சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைத்த அரிசியை பிளெண்டரில் அரைத்துக்கொள்ளவும்
4.பருப்பு மற்றும் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
5.நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் கறி இலைகளை சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.அடை மாவு தயார்
7. ஒரு தோசை கல்லை சூடாக்கி , அதில் அடை மாவு ஊற்றி கொஞ்சம் கெட்டியாக சுடவும்.
8. ஒருபுறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்
9. சூடான அடையுடன் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement