காலை உணவிற்கு கீரையும் முட்டையுமே சிறந்தது!!!

கீரைகள் மற்றும் முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.  நம் உடலுக்கு ஆற்றலை கொடுக்கக்கூடியது கொழுப்பு.  இவை இரண்டிலும் பொட்டாஷியம், மக்னீஷியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 24, 2019 12:25 IST

Reddit
Add Spinach To Your Eggs For A Wholesome Breakfast Meal
Highlights
  • Team your eggs with an equally nutritious food - spinach
  • The flavours of eggs and spinach sit well with each other
  • Both the foods combined make for a wholesome meal

இரவு நீண்ட மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் அத்தியாவசியமானது.  அதனால் தான் காலை உணவு என்பது மிகவும் முக்கியம் என்றும் அதனை தவற விடக்கூடாது என்று கூறுகின்றனர்.  காலை உணவை தவறாமல் சாப்பிடும்போது தான் உங்கள் மூளை மற்றும் உடல் இயக்கங்கள் சுறுசுறுப்பாக இருக்கும்.  இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் காலை உணவை ஆரோக்கியம் நிறைந்ததாக செய்து சாப்பிட நமக்கு போதிய நேரம் இருப்பதில்லை.  அதனால் சிம்பிளான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.  புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த முட்டையை காலையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.  ஒரு நாளுக்கான முதல் உணவை சத்து நிறைந்ததாக மாற்ற நீங்கள் முட்டை மற்றும் கீரையை உண்ணலாம்.  கீரைகள் மற்றும் முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.  நம் உடலுக்கு ஆற்றலை கொடுக்கக்கூடியது கொழுப்பு.  இவை இரண்டிலும் பொட்டாஷியம், மக்னீஷியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  மிகவும் எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ரெசிபியை பார்ப்போம். சீஸி ஸ்க்ராம்பில்டு எக் வித் ஸ்பினாச் (Cheesy Scrambled eggs with Spinach):

3 அல்லது 4 முட்டையை உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.  ஒரு பேனில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதில் 3 அல்லது 4 கப் கீரையை செர்த்து வதக்கவும்.  அத்துடன் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.  வெந்தபின் அதன் மேல், சீஸ் மற்றும் பாப்ரிகாவை தூவி பரிமாறவும். 6cbo8e08

 

டேங்கி பேக்டு ஸ்பினாச் எக்ஸ் (Tangy Baked Spinach Eggs):

ஒரு கப் கீரையை வெதுவெதுப்பான நீரில் போட்டு 5 -7 நிமிடங்கள் வைக்கவும்.  அதில் 2 -3 தக்காளிகளை வெட்டி போடவும்.  பின் கீரையில் உள்ள அதிகபடியான நீரை வடித்துவிட்டு அதில் தக்காளியை சேர்க்கவும்.  உப்பு, மிளகு சேர்த்து இந்த கலவையை ஒரு பேக்கிங் பாத்திரத்திற்கு மாற்றவும்.  அதில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும்.  அவனில் 7 - 8 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.  பின் இதில் சீஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பறிமாறவும். lin650d

 

ஸ்பினாச் அண்ட் எக் ஆம்லெட் (Spinach and Egg Omelette):

ஒரு பௌலில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அத்துடன் கீரைகளை சேர்க்கவும்.  அதில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலந்து கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி ஆம்லெட் தயாரிக்கலாம்.  நீங்கள் விரும்பினால் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து கொள்ளலாம். 

jiog521o

 

Listen to the latest songs, only on JioSaavn.com

நம் உடலுக்கு பச்சை காய்கறிகள் எப்போதும் ஆரோக்கியமானவை.  அவற்றில் ஊட்டச்சத்துகள் ஏராளமாய் உள்ளது.  குறிப்பாக முட்டையும் கீரையும் சேரும்போது நம் உடலுக்கு நிச்சயம் நன்மைகள் அதிகம். Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement