மூன்றே பொருட்களை கொண்டு ருசியான ரெசிபியை தயார் செய்யலாம்!!

சாதம், தக்காளி, வெங்காயம், சாட் மசாலா ஆகியவை சேர்த்து காரசாரமான ரெசிபியை தயாரிக்கலாம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 12, 2019 16:54 IST

Reddit
Indian Cooking Tips: Add These 3 Ingredients To Leftover Rice To Make It Wholesome And Delish
Highlights
  • சாதம் சாப்பிட்டால் தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும்.
  • இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது.
  • வெங்காயம்,தக்காளி,சாட் மசாலா,சாதம் கொண்டு ருசியான ரெசிபியை தயாரிக்கலாம்.

சாதத்திற்கு ஏற்ற கிரேவி, சாஸ், யோகர்ட், ஊறுகாய், சட்னி போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை நாம் வழக்கமாக கொண்டிருப்போம்.  வேகவைத்த சாதத்தை மட்டுமே கொண்டு சில அருமையான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  தக்காளி, வெங்காயம், சாட் மசாலா ஆகியவை சேர்த்து காரசாரமான ரெசிபியை தயாரிக்கலாம்.  இத்துடன் தயிர் அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.   சில நொடிகளிலேயே எப்படி ருசியான ரெசிபியை தயாரிப்பதென்று பார்ப்போம்.  
 

ueld8tng

தேவையான பொருட்கள்: 
வேகவைத்த சாதம் - 1 கப் 
வெங்காயம் - 1
தக்காளி - 1 
சாட் மசாலா - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 

செய்முறை: 
அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.  எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.  பின் நறுக்கி வைத்த தக்காளி மற்றும் சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.  அதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி கொள்ளவும்.  வதங்கிய பின் அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.  
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement