நீளமான மற்றும் மென்மையான கூந்தலை பெற இவற்றை சாப்பிடலாம்!!!

சூரியகாந்தி விதை, சியா விதை, ஆளி விதை போன்றவற்றில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது. 

  |  Updated: May 20, 2019 19:45 IST

Reddit
Add These 5 Omega-3-Rich Foods To Your Diet For Longer and Softer Hair
Highlights
  • ஒமேகா 3 உணவால் கூந்தல் நன்கு செழித்து வளரும்.
  • உடலுக்கு தேவையான கொழுப்புகளில் ஒமேகா 3 மிகவும் முக்கியமானது.
  • மீன், வால்நட், கனோலா ஆயில் ஆகியவற்றில் ஒமேகா 3 நிறைந்திருக்கிறது.

கூந்தலுக்கு தொடர்ச்சியாக எண்ணெய் தேய்ப்பது, மசாஜ் செய்வது போன்றவற்றால் கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.  தற்போது கூந்தலை பராமரிப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  கூந்தல் வளர்ச்சிக்காக லட்ச கணக்கில் செலவழிக்கவும் நம்மில் பலர் தயாராகவுள்ளனர்.  உணவில் இருந்து துவங்க வேண்டும்.  வெளிப்பிரயோகத்தை காட்டிலும் உணவு பழக்கத்தை சரிசெய்தாலே போதும், கூந்தலை வளர வைக்க முடியும்.  ஒமேகா 3 நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.  முதலில் ஒமேகா 3 நிறைந்த உணவை சாப்பிடுவதால் கூந்தல் எப்படி வளரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Newsbeepஒமேகா 3:

ஒமேகா 3 என்பது உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகளில் ஒன்று.  இது மீனில் அதிகம் இருக்கிறது.  அதனால் தான் கண்கள் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மீன் சாப்பிடும்படி பரிந்துரைக்கிறார்கள்.  மேலும் ஒமேகா 3ல் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, வேர் பகுதியை வலுவாக்குகிறது.  ஒமேகா 3 நிறைந்த சில உணவு வகைகளை பார்ப்போம்.

71tehbs8

 நட்ஸ்:

நட்ஸில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால்தான் தினமும் நட்ஸ் சேர்த்து கொள்ளுமாறு ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  வால்நட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் சூரிய கதிர்களில் இருந்து கூந்தலை பாதுகாத்து வலுவலுப்பான தன்மையை கொடுக்கிறது.  

 மீன்:

கொழுப்பு நிறைந்த மீனில் ஒமேகா 3 அதிகம் உள்ளது.  இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.  இதனால் கூந்தல் ஆரோக்கியமாக வளரும். 

of919ec8

 

கனோலா ஆயில்:

தற்போது நிறைய ஆரோக்கியம் நிறைந்த சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.  அதில் தற்போது முதன்மையாக இருப்பது கனோலா ஆயில்.  இதில் ஒமேகா 3 இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு சருமத்தையும் பராமரிக்கிறது.  இதனை சாலட் மற்றும் மற்ற உணவுகளில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.  

canola oil

 

சோயாபீன்ஸ்:

சோயாபீன்ஸில் ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் கூந்தல் வளர நினைத்தால் இதனை சாப்பிடலாம்.  

soyabean oil

 

விதைகள்:

விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.  உதாரணமாக, சூரியகாந்தி விதை, சியா விதை, ஆளி விதை போன்றவற்றில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது.  கூந்தல் வளர்ச்சிக்கும், அடர்த்தியாக வளரவும் உதவும்.  ஸ்மூத்தீஸ், ஓட்மீல் மற்றும் செரல்ஸ் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடலாம்.   Listen to the latest songs, only on JioSaavn.com

edible seeds

 

 

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement