செரிமான சக்தியை அதிகரிக்கும் பொருள் இதுதான்…!

சீரகத்தில் உள்ள ஆண்டியாக்சிடன்ஸ் செரிமானத்தை வெகுவாக அதிகரித்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

Edited by: Saroja  |  Updated: May 17, 2019 13:50 IST

Reddit
Add These Two Ingredients In Cumin (Jeera) Water To Keep Bloating At Bay
Highlights
  • சீரகத் தண்ணீர் உடல் எடை குறைக்க உதவுகிறது
  • சீரகத்தில் ஆண்டியாக்சிடன்ஸ் அதிகமுள்ளது.
  • உடலில் உள்ள கசடுகளை நீக்குகிறது

மதிய உணவாக சோலா பூரியை மசாலாவுடன் சாப்பிட்டு மிகவும் ஹெவியாக உணர்கிறிர்களா…? ஒருவிதமான வயிறு உப்புச உணர்வு இருக்கிறதா…? அசிடிட்டி அதிகமாகி வயிறு செரிமானக் கோளாறு உள்ளது என்றால் உங்கள் உடலுக்குத் தேவை ஆரோக்கியமான செரிமான முறைதான். இந்திய சமையலறைகள் இதற்கான தீர்வை வைத்திருக்கின்றன. 

நம் சமையலறையில் இருக்கும் சீரகம் செரிமானத்தை தூண்டக்கூடிய மருத்துவக் குணங்கள் இதில் உண்டு. இந்திய சமையலின் அனைத்து விதமான உணவு செய்முறையிலும் சீரகத்தை சேர்ப்பதை பார்க்கலாம். சீரகத்தினால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று உடல் எடை குறைக்க வெகுவாக உதவுகிறது. சீரகத்தில் உள்ள ஆண்டியாக்சிடன்ஸ் செரிமானத்தை வெகுவாக அதிகரித்து உடல் எடை குறைக்க உதவுகிறது. 



cumin seeds



உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. டிகே பப்ளிஷ்ங் வெளியிட்ட ‘ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகத்தில் சீரகம் செரிமானப் பிரச்னை, குமட்டல், வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை குறைக்க வெகுவாக உதவுகிறது. உடலின் சீரண சக்தியை அதிகரிக்கும் வகையில் சீரகத் தண்ணீரில் எலுமிச்சை மற்றூம் தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் பிரச்னை உள்ளதென்றால் இந்த தண்ணீர் நிச்சயமாக உதவும். இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம். சீரகத் தண்ணீரில் சிறிதளவு லெமன் மற்றும் தேன் கலந்து குடியுங்கள் ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement