மலச்சிக்கலை தவிர்க்கும் ஆப்பிள்

மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: November 12, 2018 17:05 IST

Reddit
Constipation Problem? Adding An Apple To Your Daily Diet Will Keep Constipation At Bay

மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 22 சதவிகிதத்தினர் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆயுர்வேத முறைப்படி உடலில் சூடு இல்லாமல் உடல் குளிர்ந்து போயிருப்பதே மலச்சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வாழ்வியல் முறை, துரித உணவுகள், மது, புகைப்பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற உணவு பழக்கங்களாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்கப்படுகிறது. அதேபோல குடல் இயக்கங்களும் சீராக இருக்கும்.

ஆப்பிளின் நன்மைகள்

ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உணவு பழக்கத்தால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதனால் உடல் எடை குறையும். தினசரி உணவில் ஆப்பிளை சேர்த்து கொண்டால் இதய பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். குறிப்பாக பெண்களில், தினசரி ஆப்பிள் சாப்பிடுபவர்களில் 13 முதல் 22 சதவிகிதத்தினர் வரை மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆப்பிளில் இருக்கக்கூடிய பெக்டின் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும். ஆப்பிளில் அதிகபடியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுகிறது. இதில் இரும்பு சத்து மற்றும் சார்பிடால் என்னும் சத்து இருப்பதால் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

apple punch

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்

மலச்சிக்கல் என்பது நாட்பட்டு அல்லது எப்போதாவது ஏற்படலாம். வயது, கர்ப்பக்காலம், உடல் ஆரோக்கியம் பொருத்து மலச்சிக்கல் பிரச்சனை மாறுபடும்.

உணவு பழக்கத்தில் மாற்றம்

அதிகபடியான கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, மது மற்றும் கஃபைன் ஆகியவற்றை தொடர்ச்சியாக உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

உடலில் நீர்போதாமை

தினசரி கட்டாயமாக இரண்டு லிட்டர் தண்ணீரை குடிப்பது அவசியம். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர குடிக்காவிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம். செயற்கை பானங்களை குடிப்பதாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் என்பதால் அதனை தவிர்ப்பது சிறந்தது.

உடற்பயிற்சியின்மை

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால் செரிமானமும் சீராக இருக்காமல் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

மருந்துகள்

சிலவகையான வலிநிவாரண மருந்துகள் உடல் இயக்கத்தை மாற்றம் செய்கிறது. இதனால் உடலில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். சில சமயங்களில் வைட்டமின் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் கூட மலச்சிக்கல் பிரச்சனையை உருவாக்கும்.

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அத்துடன் எலுமிச்சை மற்றும் வெள்ளரி சேர்த்து குடிக்கலாம். சுவையாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement