சருமத்தை அழகுடன் பொழிவாக வைக்க பாதாம் கலந்த 3 ஃபேஸ் மாஸ்க்

பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: January 26, 2019 12:19 IST

Reddit
Almonds For Skin: Three DIY Almond Face Masks For Winter Skin Care
Highlights
  • பாதாம் பருப்பில் மக்னீசியம் நிறைந்துள்ளது.
  • உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்கிறது
  • பாதாமில் ஃபேட்டி ஆஸிட்டிஸ் மற்றும் விட்டமின் ஈ உள்ளது.

ஒவ்வொரு அம்மாக்களும் குழந்தைகளுக்கு கை நிறைய பாதாம் பருப்பை அள்ளிக் கொடுத்து  அவர்களை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவதைப் பார்க்கலாம். பாதாமில் உள்ள புரதச்சத்தும், உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆஸிட்டிஸ் மற்றும் விட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் ஆகியவை நம்முடைய உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

இதோ பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்ய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறது. சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும். 

1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க் 

1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்

2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவில் விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை  போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

almond milk

2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

2 டேபிள்ஸ்பூன் பாதாம்

1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்

3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

b796g1g8

ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் க்ரீம்மை பயன்படுத்தவும்.

0686sfcg

3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்

1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்

2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு

1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்

Listen to the latest songs, only on JioSaavn.com

ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து  ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement