நாவை தூண்டும் நெல்லி ஊறுகாய்

வீட்டில் தயாரிக்க கூடிய நெல்லி ஊறுகாய் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் ஹோம் செஃப் வித்யாவின் குறிப்புகளுடன் நெல்லி ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்

एनडीटीवी  |  Updated: June 04, 2018 18:17 IST

Reddit
amla pickle recipe
இந்தியாவில், வெவ்வேறு வகைகளில் நெல்லிக்காய் பயன்படுகிறது. காய்ந்த பழமாகவும், பொடியாக, ஊறுகாயாக, சாறாக, சாக்லெட்டாக இப்படி பல வகைகளில் பயன்படுத்தலாம். ‘உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது’ என்று பழம்பெறும் தமிழ் பழபொழி உண்டு. வைட்டமின் சத்து அதிகம் நிறைந்தது. குறிப்பாக வைட்டமின் சி சத்து, செரிமானத்திற்கு உதவ கூடியது. வீட்டில் தயாரிக்க கூடிய நெல்லி ஊறுகாய் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் ஹோம் செஃப் வித்யாவின் குறிப்புகளுடன் நெல்லி ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

Commentsதேவையான பொருட்கள்
 • நெல்லிக்காய் - 1 கிலோ
 • நல்லெண்ணைய் - 200ம மிலி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் - ¼ தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
 • மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி
 • உப்பு - 3 தேக்கரண்டி
 • வெல்லம் - ½ தேக்கரண்டி
 • வறுத்த வெந்தய்ம் , பொடியாக - ¼ தேக்கரண்டி

செய்முறை
 • நெல்லிக்காய்களை நன்றாக கழுவி, காயவைத்து, பின் வேகவைத்து சிறு துண்டுகளாக அறுத்து வைக்கவும்
 • ஒரு கடாயில் நல்லெண்ணைய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் சேர்த்த பின், நெல்லிக்காய் துண்டுகளை சேர்க்கவும்
 • பிறகு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். ருசி பார்த்து, அதற்கேற்ப நறுமணப் பொருட்களை சேர்த்து கொள்ளவும்
 • இறுதியாக, வெந்தய பொடி சேர்த்து கலக்கி இறக்கவும்
 • அறை வெப்பநிலைக்கு குளிர்ந்தவுடன், காற்று புகாத ஜாடிகளில் சேமித்து வைக்கவும்
 • மூன்று மாதங்கள் வரை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்

Listen to the latest songs, only on JioSaavn.com

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement