உடல் எடை குறைக்க: கொழுப்பைக் குறைக்கும் நெல்லிக்காய் டீ எப்படி செய்யலாம் தெரியுமா ...?

இதை அன்றாடம் பயன்படுத்தி வந்தாலே நிச்சயம் உடலுக்கு பலனைக் கொடுக்கும். உடல் எடை குறைய நெல்லிக்காய் டீ நிச்சயமாக பலனளிக்கும். கொதிக்கும் தண்ணீரில் நெல்லிக்காய் பொடி மற்றூம் இஞ்சி கலந்து டீ தயாரிக்கலாம்.

Edited by: Amba Batra Bakshi  |  Updated: February 18, 2019 19:24 IST

Reddit
Amla Tea For Weight Loss: How To Make This Ayurvedic Drink For Fat Burn
Highlights
  • நெல்லிக்காயில் ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளது
  • இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது
  • செரிமானத்தை அதிகரிக்கிறது

உலகளவில் நெல்லிக்காயை  இந்தியன் கூஸ்பெர்ரி என்றும் பெயரிட்டு அழைப்பதுண்டு. நெல்லிக்காயில் ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளது. இந்தியாவின் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயை பவுடராகவும் மருத்துவ முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிகாயை ஜூஸாக குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறைகிறது. நெல்லிக்காயை டீயாகவும் செய்து குடிக்கலாம். 

amla
 

புளிப்பான இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியச் சத்துகள் நிறைந்துள்ளது.  இது சருமத்திற்கும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மிகவும் ஏற்றது. இதை அன்றாடம் பயன்படுத்தி வந்தாலே நிச்சயம் உடலுக்கு பலனைக் கொடுக்கும். உடல் எடை குறைய நெல்லிக்காய் டீ நிச்சயமாக பலனளிக்கும். கொதிக்கும் தண்ணீரில் நெல்லிக்காய் பொடி மற்றூம் இஞ்சி கலந்து டீ தயாரிக்கலாம். 

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்

 ஆண்டியாக்ஸிடன்ஸ் நிறைந்தது 

நெல்லிக்காய் பவுடரில் நெல்லிக்காய் டீ தயாரிக்கலாம். இந்த டீ முழுவதும் ஆண்டியாக்ஸிடன்ஸ் நிறைந்தது. நெல்லிக்காய் நேரடியாகவே உடல் எடை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. 

செரிமானத்தை தூண்டுகிறது 

நெல்லிக்காய் பவுடரில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. 

சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது 

நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயை தடுப்பதுடன் உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது. 

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

நல்ல வளர்சிதை மாற்றம் அதிக கலோரிகளை திறம்பட எரிக்க வேண்டும். நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

 ஆற்றல் அதிகரிக்கும் 

நெல்லிக்காய் புரதச் சத்துகளை ஒருங்கிணைக்கிறது இதனால் ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் அதிகளவில்  உடற்பயிற்சி செய்யவும் கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க முடிகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

amla
 

நெல்லிக்காய் டீ செய்முறை

நெல்லிக்காய் டீயை எளிதாக செய்ய முடியும். 1 1/4 கப் தண்ணீர் எடுத்து நன்றாக கொதிக்க வைக்கவும் பின் அதில் காய்ந்த நெல்லிக்காய் பொடியை சேர்த்து ஃபிரஷ்ஷாக துருவிய இஞ்சியை சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும். ஒரு கப்பாக தண்ணீர் குறைந்ததும் இறக்கி ஆறவைக்கவும். பின் டீயை வடிகட்டி குடிக்கவும். விரும்பினால் தேன் கலந்து குடிக்கவும். 

Comments

 
amla powder


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement