குழந்தைகளை பருமனாக்கும் ஆண்டிபையாடிக்ஸ்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 07, 2018 00:46 IST

Reddit
Antacids, Antibiotics May Up Obesity Risk In Children: Foods To Manage Obesity

குழந்தை பருவத்தில் அதிகபடியான ஆண்டிபையாடிக்ஸ் மற்றும் ஆண்டாசிட்ஸ் உட்கொண்டால் அது குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாவை பெரிதாக்கி உடலில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி உடல் பருமனை அதிகரிக்கிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. 2014ல் நடத்தப்பட்ட ஆய்வில் 1.9 பில்லியன் நபர்கள் ஆண்டிபையாடிக் சாப்பிடுவதால் உடல் பருமனாக இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்டிபையாடிக் மற்றும் ஆண்டாசிட் பயன்படுத்தியபின் ஏற்படும் உடல் பருமனை குறைக்க சில எளிய டயட் உணவுகளை பார்ப்போம்.

1. ராகி, கம்பு, சோளம் போன்ற முழு தானியங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

2. கொண்டைக்கடலை, சுண்டல், சோயா மற்றும் பருப்புகள் போன்றவற்றை வேகவைத்து அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிடலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி செய்து சாப்பிடலாம்.

3. தினசரி ஏதேனும் ஒரு பழங்களை சாப்பிடலாம். மேலும் அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ற காய்கறிகளை செய்து சாப்பிடலாம்.

4. நெய், வெண்ணெய், சீஸ், க்ரீம், இறைச்சி, பால் போன்றவற்றில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் அடங்கியிருக்கிறது.

5. நாள் ஒன்றுக்கு மூன்று முறை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அதில் காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், பால், தயிர் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சம அளவில் உட்கொள்ள வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement