ஆன்டி- ஏஜிங் மூலிகைகள்: வயதான தோற்றத்தைக் குறைக்கும் 7 ஆயுர்வேத மூலிகைகள்.

வயது கூடுவதைத் தவிர்க்க முடியாது. உடல், உளவியல், மன மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு நபரின் ஏஜிங் நடைப்பெறுகிறது.

Sarika Rana  |  Updated: July 23, 2018 15:43 IST

Reddit
Anti-Ageing Herbs: 8 Ayurveda Herbs To Slow Down Ageing

வயது கூடுவதைத் தவிர்க்க முடியாது. உடல், உளவியல், மன மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு நபரின் ஏஜிங் நடைப்பெறுகிறது. சுருங்கிய தோல், கூந்தல் நரைத்தல் ஆகியவை வயதாவதுக்கு அறிகுறியாகும். இந்த மாற்றங்களை தவிர்க்க முடியாது, ஆனால் மருந்துகள், இயற்கை சமையல் பொருட்கள் அல்லது ஆயுர்வேத மூலிகைகள் மூலம் அவற்றைத் தாமதப்படுத்தலாம். 

வயதான தோற்றத்தை  தாமதப்படுத்த நீங்கள் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில  மூலிகைகளை கீழ் காணலாம்.

1. குடுச்சி

குடுச்சி, அல்லது கிலோய், நம் தோல் அடுக்குகளை புதுப்பிக்கும். அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் இந்த குடுச்சி பயன்படுத்தப் படுகிறது.

giloy 625

2. குக்குலு

இது குங்கு என்ற பூக்கும் மரத்திலிருந்து, (Mukul Myrrh) பெறப்பட்ட, சக்தி வாய்ந்த மூலிகை ஆகும். இதன் எதிர்ப்பு சக்தி  குணங்கள் பல்வேறு நோய்களை எதிர்ப்பதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. 

3. வல்லாரை

நினைவக இழப்புகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு வல்லாரை பயனுள்ளதாக இருக்கும். அதோடு இது உங்கள் மூளையில் புத்துணர்ச்சியூட்டும்.

brahmi

4. நெல்லிக்காய்

நெல்லிக்காய் அல்லது அம்லா, வைட்டமின்- C மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் கொண்ட சிறந்த மூலிகை ஆகும், இது பல்வேறு நோய்களுக்கு உதவுகிறது.

5. மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி - ஏஜிங். இதனுடைய நோய்த்தடுப்பு குணங்கள், நோய்களை எதிர்க்க உதவுகிறது.

white turmeric

6. ஜின்ஸெங்

ஜின்ஸெங்கில் பைட்டோகெமிக்கல்கள் நிறைய உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை  ஊக்குவிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் இது உதவுகிறது. இந்த  ஃபைட்டோகெமிக்கல்கள் உங்கள் சருமம் மாசு மற்றும் சூரிய ஒளியில் வெளிப்படும் போது உண்டாகும் ஃப்ரீ ரேடிகல்களையும் அகற்ற உதவுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

7. கோத்து-கோலா

இது மிகவும் அத்தியாவசிய ஆன்டி-ஏஜிங் பொருள். தோல் மற்றும் உடலை பாதுகாத்து உங்களை எப்போதும் இளமையாக இது வைத்திருக்கும். 
 

Comments

gotu kola


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement