நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆப்பிள் சூப்!!

ஆப்பிளில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃபைட்டோந்யூட்ரியண்ட்ஸ், ஃப்ளேவனாய்டு மற்றும் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உண்டாவதை தடுக்கிறது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 16, 2019 11:53 IST

Reddit
Monsoon Diet: Apple And Almond Soup Recipe To Boost Your Immunity
Highlights
  • மழைக்காலங்களில் அடிக்கடி சூப் செய்து குடிக்கலாம்.
  • இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்துவிடுகிறது.

மழைக்காலத்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற உடல் உபாதைகள் வருவது சகஜம்தான்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமானால் கட்டாயமாக உடல் உபாதைகள் ஏற்படும்.  ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் கிருமிகளால் உண்டாகும் நோய்கள் நம்மை நெருங்காது.  மழைக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சூப் ரெசிபியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  குறிப்பாக பாதாம் மற்றும் ஆப்பிள் கொண்டு சூப் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஆப்பிளின் நன்மைகள்: 

* ஆப்பிளில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃபைட்டோந்யூட்ரியண்ட்ஸ், ஃப்ளேவனாய்டு மற்றும் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உண்டாவதை தடுக்கிறது.  

* ஆப்பிளில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கும் உடல் எடை குறைப்பிற்கும் சிறந்தது. 

* குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய ப்ரீபையோடிக் தன்மை ஆப்பிளில் இருப்பதால் அடிக்கடி ஆப்பிளை சாப்பிட்டு வரலாம். v3agt47g

 

பாதாமின் நன்மைகள்:

* பாதாமில் புரதம் அதிகமாக இருப்பதால் உடலிற்கு ஆற்றலை கொடுக்கிறது.

* பாதாமில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் சீராவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. 

* வைட்டமின் ஈ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை பாதாமில் இருப்பதால் இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.   

sq1l072g

 
 

Listen to the latest songs, only on JioSaavn.com

ஆப்பிள், பாதாம், தேன் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  இதில் இஞ்சி சேர்க்கப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகளையும் போக்குகிறது.   

 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement