உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி?

Sakshita Khosla  |  Updated: July 17, 2018 18:01 IST

Reddit
Apple Tea: Weight Loss Benefits And How To Make It At Home!
Highlights
  • ஆப்பிள் டீ சூடாகவும், குளிர்ந்த முறையிலும் அருந்தலாம்.
  • ஆப்பிள் டீ நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது.
  • உடல் குறைப்புக்கு ஆப்பிள் டீ உதவுகிறது

ஆப்பிள் பலவகைப்பட்ட பயன்கள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம்  தரும் ஒரு பழமாகும். நீங்கள் அதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட்கள், கஸ்டட்ஸ், புட்டிங்க்ஸ்,கேக்குகள் மற்றும் பைகளாக உண்ணலாம். ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆப்பிள்,  ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை  குறைத்து, உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுவம்.

சரியான முறையில் மற்றும் அளவில் ஆப்பிளை உட்கொள்வதால் அது எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆப்பிள் ஸைடர் வினிகர் மற்றும் அதன் எடை குறைப்பு நன்மைகள் பற்றி நிறைய பேர் அறிந்திருந்தாலும், எடை குறைப்புக்கு உதவும் ஆப்பிள் பானத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. அதில் ஒன்று தான் ஆப்பிள் டீ. கொழுப்பைக் குறைக்க, விரைவாக எடையை குறைக்க நீங்கள் வீட்டிலேயே சுலபமாக தாயாரிக்கக் கூடிய பானம் தான் இந்த ஆப்பிள் டீ. 

ஆப்பிள் டீ, கொதிக்கும் ஆப்பிள் துண்டுகளுடன், கரும்  தேயிலைகள் மற்றும் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. டீயை சூடாக அல்லது குளிர்ச்சியாக குடிக்கலாம், இது சற்று இனிமையாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த பானம் பல ஆரோக்கிய நலன்கள் கொண்டிருக்கிறது, 

ஆப்பிள் டீயின் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஆப்பிள் டீ நல்ல அளவில் வைட்டமின் சி கொண்டுள்ளது. இது ஆப்பிள் துண்டுகள் தண்ணீர் கொதிக்கும் போது ஊடுருவுகிறது. உடல் எடை குறைப்புக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு மண்டலம் முக்கியமானது.

கொழுப்பை எதிர்த்து போராடுகிறது.

ஆப்பிளின் சதை மற்றும் தோலில் இருக்கும் ஃபைபர் மற்றும் ஆக்ஸி பாலிபினால்கள், ரத்தத்தில் இருந்து கெட்ட கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது, இதனால் உடம்பிலிருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.

ஒரு ஆரோக்கியமான செரிமான மண்டலம் எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆப்பிள் டீ  செரிமானம் அதிகரிக்க உதவும். ஏனென்றால் ஆப்பிளில் கரையக் கூடிய ஃபைபரைக் இருக்கிறது. 

293d86q

ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது

ஆப்பிள்கள் ஃபிரக்டோஸ் வடிவில் இயற்கை சர்க்கரைகள் தன்னுள் பெற்றுள்ளது. இது வளர்சிதை மாற்ற சமநிலையை மேம்படுத்துவதுடன் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. 

குறைந்த கலோரிகள்

ஆப்பிள்கள் எதிர்மறை கலோரி பழங்கள். அதாவது கலோரிகளில் அப்பிள் மிகவும் குறைவாக இருப்பதாக அர்த்தம். ஒரு நிலையான அளவிலான ஆப்பிள், 100 கிராமுக்கு 50 கலோரிகளைக் கொண்டிருக்கிறது, இது அமெரிக்காவின் விவசாயத் துறையின் தகவல்.  

உடல் எடையை குறைப்பதற்கான ஆப்பிள் டீயை தயாரிப்பது எப்படி?

ஆப்பிள் டீயை தயாரிப்பது மிகவும் சுலபமானது. இதை குளிர் காலத்தில் அருந்துவது மிகவும் சிறந்தது. ஆப்பிள் டீ தயாரிப்பதற்கு,  ஒரு முழு ஆப்பிள், மூன்று கப் தண்ணீர், எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி, இரண்டு டீ பேக்குகள் மற்றும் இலவங்கப்பட்டை குச்சி வேண்டும். 

குழியான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சை சாறை சேருங்கள். இப்போது அடுப்பை ஏற்றி அதில் டீ பேக்குகளை கொண்டு கிளறுங்கள். உங்கள் டீ கொதிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது ஆப்பிளை எடுத்து சிறுத் துண்டுகளாக வெட்டி, அதை டீயில் சேருங்கள். தோலுடன் உங்கள் பழத்தை டீயில் சேர்த்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அதை கொதிக்க வைத்துவிட்டு இறுதியாக இலவங்கப்பட்டை குச்சி அல்லது இலவங்கப்பட்டை தூளை அதில் சேருங்கள்.இப்போது டீயை கப்பில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இனிப்பை சேருங்கள்.

அந்த பாத்திரத்தில் மீதம் இருக்கும் ஆப்பிள் துண்டுகளைத் துக்கிப் போட வேண்டியதில்லை. எஞ்சியிருக்கும் ஆப்பிள்களை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது ஃப்ரூட் கஸ்டர்டுகளில் அவற்றைத் சேர்த்துக் கொள்ளலாம்.டீயில் உள்ள இலவங்கப்பட்டை உடலில் உள்ள நச்சை நீக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.ஒருவேளை உங்களுக்கு ஆப்பிள் ஒத்துக் கொள்ளாதென்றால் இந்த டீயை குடிக்காதீர்கள். உங்கள் எடை குறைப்பு உணவில்  இந்த தேநீரைச் சேர்த்துக் கொள்வதற்கு  முன் ஒரு மருத்துவர் அல்லது டயட்டீஸியனிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

Comments

About Sakshita KhoslaSakshita loves the finer things in life including food, books and coffee, and is motivated by self-indulgence and her love for words. When not writing, she can be found huddled in the corner of a cosy cafe with a good book, caffeine and her own thoughts for company.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com