பட்டு போன்ற கூந்தலை பெற நேச்சுரல் ஹேர் மாஸ்க்!!!

வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் கொண்டு கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். 

   |  Updated: April 03, 2019 17:18 IST

Reddit
Apply This 3-Ingredient Hair Mask To Get Silky Smooth Hair

கோடை வெயிலால் அதிகபடியான வியர்வை வெளியேறுகிறது.  இதனால் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளும் ஏற்படுகிறது.  வெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, இரசாயண பயன்பாடுகள் ஆகியவற்றால் கூந்தல் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படும்.  உங்கள் கூந்தல் வறண்டு, பொலிவிழந்து காணப்படுகிறதா?  கவலையை விடுங்கள்.  உங்களுக்காகவே தான் இந்த ஹெல்தி ஹேர் மாஸ்க்குகள். உங்கள் கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை நீங்கள் வெளியில் தேடி அலைய வேண்டாம்.  உங்கள் சமையலறையிலேயே இதற்கான பலன் உள்ளது.  வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் கொண்டு கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம்.  இவற்றில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. 

Newsbeepதயிர் மற்றும் வாழைப்பழம் கூந்தலின் நீளத்தை அதிகரிக்கிறது.  தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் கூந்தலை மிருதுவாகும்.  வாழைப்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும்.  இவற்றை கொண்டு எப்படி ஹேர் மாஸ்க் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

தேன் – 2 தேக்கரண்டி

தயிர் – 2-3 தேக்கரண்டிசெய்முறை

Listen to the latest songs, only on JioSaavn.com

ஒரு பௌலில் வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும்.  அதனை ஒரு ஃபோர்க் ஸ்பூன் கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.  பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும்.  இவை அனைத்தையும் நன்கு அரைத்து கொள்ளவும்.  இந்த விழுதை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கூந்தலை அலசி விடவும்.  இந்த ஹேர் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.  மேலும் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து கூந்தல் பட்டு போல மிருதுவாகவும் வலவலப்புடனும் இருக்கும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement