கமகமக்கும் ஆற்காட் பாரம்பரிய உணவுகள்!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்த ஆற்காடு உணவுத் திருவிழா நடைப்பெற உள்ளது

NDTV Food  |  Updated: September 03, 2018 22:06 IST

Reddit
Arcot Food Festival at Navaratna, Le Royal Meridien

வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற ஆற்காடு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய சுவை கொண்டு உணவுத் திருவிழா சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

சிறப்பு விருதினர் மஞ்சுளா, செஃப் நந்தகுமாரின் கைப்பக்குவத்தில், ஜீரா, கிராம்பு, சோம்பு, மல்லி, மிளகு, மஞ்சள், ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களுடன் தெனிந்திய சுவை கலந்து சமைக்கப்படும் உணவு வகைகள் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் இடம் பெற்றுள்ளது.

முருங்கை மிளகு ரசம், மட்டன் முள்ளங்கி குழம்பு, பக்கோடா குழம்பு, வாணியம்பாடி கோழி பிரியாணி, மக்கன் பேடா ஆகியவை கண்டிப்பாக சுவைக்க வேண்டியவை. சென்னையில் இருந்து கொண்டே, ஆற்காடு பாரம்பரிய உணவுகளை கமகமக்க சென்னை லீ மெரிடியன் உணவுத் திருவிழாவிற்கு விசிட் செய்யவும்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்த ஆற்காடு உணவுத் திருவிழா நடைப்பெற உள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை உணவுத் திருவிழா இயங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு - நவரத்னா, சென்னை லீ மெரிடியன் - 044 22314343

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement