ரெஸ்டாரன்ட்ல சாப்பிட போறீங்களா? இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.

கொரோனா பெரும்பாலும் மக்கள் பேசும்போது, ​​இருமல் அல்லது தும்மும்போது வெளிப்படும் சுவாச துளிகளால் கொரோனா பரவுகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  |  Updated: September 18, 2020 15:09 IST

Reddit
Want To Go To A Restaurant To Eat? Check These Safety Measures Issued By CDC

கொரோனா காலத்தில் ரெஸ்டாரெண்ட் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

கொரோனா பெரும் தொற்றானது நம்மை பல மாதங்கள் வீட்டிலேயே தங்க வைத்து விட்டது. நம்மில் பெரும்பாலோர் இப்போது வெளியேறி சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஊரடங்கின்  போது நாம் அதிகம் தவறவிட்ட விஷயங்களில் ஒன்று சாப்பிடுவது.

உணவகங்கள் திறந்தவுடன் நம்மில்  சிலர் உணவகங்களுக்கு சென்று உணவருந்துகிறோம். இது எவ்வளவு பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பற்றது என்பதை சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் ஒரு உணவகத்துக்குச் செல்ல திட்டமிட்டால், அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் முன்மொழியப்பட்ட சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.
 

f9mspcto

Restaurants should take all safety precautions in the wake of Coronavirus pandemic. 

Newsbeep

உணவகங்களுக்கு சென்று உணவருந்துவது தொடர்பாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உணவக உரிமையாளர்கள் , பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அங்கு வசிக்கு மக்களை பாதுகாக்கக்கூடிய அல்லது கொரோனோ பரவலை தடுக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உணவகம் மற்றும் பார்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

உச்சபட்ச ஆபத்து : ஆறு அடி இடைவெளிக்கு குறைவான தொலைவு கொண்ட உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள்.மிக அதிக ஆபத்து: போதுமான 6 அடி இடைவெளியில் டேபிள்களை இருக்கைகளை குறைத்து அமைக்கப்பட்டிருக்கும் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள்.அதிக ஆபத்து: வாகனத்தில் அமர்ந்து உணவருந்தும் முறையை கொண்டுள்ள உணவகங்கள், டெலிவரி, டேக்-அவுட் மற்றும் கர்ப்-சைட் பிக்-அப் மற்றும் போதுமான 6 அடி இடைவெளியில் டேபிள்களை இருக்கைகளை குறைத்து அமைக்கப்பட்டிருக்கும் வெளிப்புறம் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள்.

மிகக் குறைந்த ஆபத்து: வாகனத்தில் அமர்ந்து உணவருந்தும் முறையை கொண்டுள்ள உணவகங்கள்,, டெலிவரி, டேக்-அவுட் மற்றும் கர்ப்-சைட் பிக்-அப் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கும் உணவகங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

மேல குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு அளவுகளில் நாம் உணவருந்த செல்லும் உணவகங்களின் தன்மை இருப்பதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

கொரோனா பெரும்பாலும் மக்கள் பேசும்போது, ​​இருமல் அல்லது தும்மும்போது வெளிப்படும் சுவாச துளிகளால் கொரோனா பரவுகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அசுத்தமான மேற்பரப்பில் இருந்தும் வைரஸ் கைகளுக்கு பரவக்கூடும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எப்போதும் முகமூடியை அணிந்து, மேற்பரப்புகளைத் தொட்டபின்னும், சாப்பிடுவதற்கு முன்பும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து, சமூக விலகலைப் பின்பற்றுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement