அவக்கேடோ சதையைவிட அதன் விதையில் தான் சத்து அதிகம் என்றால் நம்புவீர்களா?

அவகேடோ விதையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 19, 2019 12:18 IST

Reddit
Avocado Seeds Have Higher Antioxidant Activity Than The Pulp: Study

Listen to the latest songs, only on JioSaavn.com

உலகில் மிகவும் பாப்புலரான பழங்களின் ஒன்று இந்த ஆவகேடோ. க்ரீம் போன்று இருக்கும் இந்தப் பழம் சூப்பர் ஃபுட் வரிசையில் ஒன்று. இளம்பச்சை நிறத்தில் இருக்கும் இதன் சதைப் பகுதி அதிகப்படியான சத்து நிறைந்தது. ஆன்டிஆக்ஸிடண்ட், நல்ல கொழுப்பு, ரிச் வைட்டமின்கள் என சத்து ஏராளம் தாராளம். அதோடு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இதன் பங்கு முக்கியமானது. ஒரு புது ஆராய்ச்சி முடிவு நம் எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கிறது, அதுதான் இதன் விதை. பென்சிலேவியாவைச் சார்ந்த பல்கலைக் கழகம் நடத்திய ஆராய்ச்சியில் இந்த விதை உடல் அழற்சியை போக்கும் சக்தி கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விதையிலிருந்து அழற்சியைப் போக்கும் மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து ஃபுட் கலரிங் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சி நடந்து வருகிறது. 

இந்த ஆராய்ச்சி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அட்வான்ஸ்டு இன் ஃபுட் டெக்னாலஜி நியூட்ரிஸினல் சையிண்ஸஸில்  (Advances in Food Technology and Nutritional Sciences) வெளியடப்பட்டிருக்கிறது. இதற்கு அழற்சியப் போக்கும் அவகேடோ விதைகள் ("Anti-Inflammatory Properties of a Colored Avocado Seed Extract") எனப் பெயரிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் இதில் புற்றுநோய், இதயநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் சக்தியும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement