அவகாடோ டீயில் இவ்வளவு நன்மைகளா??

இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் ஏற்படும் வலி, வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 24, 2019 10:09 IST

Reddit
Heard Of Avocado Tea? It Can Do Wonders For Skin, Blood Pressure And Weight Loss, See Recipe
Highlights
 • அவகாடோ உங்களை ஃபிட்டாக வைத்திருக்கும்.
 • இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம்.
 • இதன் விதையில் ஏராளமான நன்மைகள் உண்டு.

அவகாடோவின் நன்மைகள் குறித்து உலக மக்கள் அனைவரும் அறிந்து வருவதன் விளைவாக தினசரி உணவில் அவகாடோ அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அவகாடோவை “Olive Oil of the Amerias” என்றும் அழைப்படுகிறது.  அவகாடோ க்ரீமியான பழம் மட்டும் கிடையாது.  இதில் ஏராளமான ஆரோக்கிய பயன்களும் இருக்கிறது.  குகாமோல், ஹம்மஸ், ரோல்ஸ், ஸ்மூத்தி மற்றும் சாலட் செய்வதற்கு அவகாடோவை பயன்படுத்தலாம்.  உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அவகாடோ டீ அருந்தலாம்.  அவகாடோ டீ உங்களின் ஃபிட்னெஸை எப்படி சீறப்பாக வைக்கிறதென்று பார்ப்போம்.  • அவகாடோவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 
 • அவகாடோ விதை உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்து கொள்கிறது. 
 • இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் செல்களை பராமரிக்கிறது.  இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  சருமத்தின் ஆரோக்கியத்தை காத்து முதிர்ச்சி தோற்றத்தை தாமதப்படுத்துகிறது.  மேலும் புற்றுநோய் மற்றும் ட்யூமர் கட்டிகள் வராமல் பாதுகாக்கிறது. 
 • அவகாடோ விதையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உங்களை நாள் முழுவதும் நிறைவாக வைத்திருக்கிறது.  கால்சியம் அதிகம் இருப்பதால் உடல் எடை குறைப்பில் உதவியாக இருக்கிறது. 
 • அவகாடோ டீயில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறது.  மற்ற பானங்களை காட்டிலும் இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம். 
 • அவகாடோ டீ செரிமானத்திற்கு சிறந்தது.  மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. 

osfj9bc8

 

 • இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் ஏற்படும் வலி, வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 
 • இந்த டீயை அருந்தி வருவதால் உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.  இந்த விதையில் பொட்டாசியம் இருப்பதால் உடலில் சோடியத்தால் ஏற்படும் தீங்குகளை போக்குகிறது. 
 • அவகாடோ பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை பிரகாசிக்க செய்யும். அவகாடோ டீயின் தயாரிப்பு முறை:

Comments

 1. அவகாடோ பழத்தை எடுத்து கழுவி வெட்டி கொள்ளவும். 
 2. அதன் விதை எடுத்து ஒரு க்ளாஸ் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 
 3. பின் அந்த விதையை கவனமாக வெளியே எடுக்கவும்.  ஏனென்றால், அது மிகவும் மென்மையாக மாறியிருக்கும்.  ஒருவேளை நீங்கள் அத்துடன் சேர்த்து குடிக்க விரும்பினால், காபி க்ரைண்டர்  கொண்டு துருவி சேர்த்து கொள்ளலாம். 
 4. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 7-8 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
 5. இப்போது அடுப்பை நிறுத்தி விடவும்.
 6. வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும்.
 7. அதில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com