ஒரு முழுமையான உணவு வழிகாட்டி - ஆயுர்வேதம்

ஆரோக்கியமான உடல் நலம் கொண்டு சிறந்த வாழ்க்கையை ஆயுர்வேதம் தரும் என நம் முன்னோர்கள் நம்பினர்.

Dr. Rupali Datta  |  Updated: June 07, 2018 12:10 IST

Reddit
Ayurveda For Health: A Complete Dietary Guide To Healthy Living
Highlights
  • ஆயுர்வேதம் நமது பண்டைய முறை மருத்துவம், வாழ்வதற்கான விஞ்ஞானம்
  • பருவகாலத்தில் வளர்க்கப்படும் உணவிலிருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களைப் பெற
  • உங்கள் உணவை நீலம், ஊதா, சிவப்பு, பச்சை, ஆரஞ்சு வண்ணத்தில் நிரப்பிடுங்கள்
தமிழ் பாரமபரியத்தில் ஆயுர்வேத மருந்துகள் அதிகமாக பயன்பாட்டை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் நலம் கொண்டு சிறந்த வாழ்க்கையை ஆயுர்வேதம் தரும் என நம் முன்னோர்கள் நம்பினர். நம் உடலுக்கு ஏற்றவாறு இயற்கை உணவுகளை உண்டால் நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

நாம் அன்றாட எடுத்து கொள்ளும் உணவில் சேர்க்க கூடிய ஆயுர்வேத நண்மைகள் 

1.ஊட்டம் நிறைந்த உணவு 

பதப்படுத்திய உணவை உண்ணாமல் இயற்கையான உணவை உண்ண வேண்டும் அதில் தான் அதிக ஊட்டச்சத்து நிறைந்திருக்கும். சுத்திகரிக்கப்பட்ட மொத்த தானியங்கள், முழு பழங்கள் மற்றும் பருவகால காய்கறிகள் நிறைய உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை காக்கும்.2. சீரான உணவு 

இதற்கு எளிமையான வழி - ஆயுர்வேத அறுசுவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றை எல்லா உணவிலும் சேர்க்க வேண்டும். இது குப்பிகள் உணவை சம நிலையில் வைத்திருக்கும் 

3. பழம் மற்றும் காய்கறிகள் 

உங்கள் உணவை காய் பழங்களால் அலங்கரியுங்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள் 

4. மசாலாக்கள் 

நம் பாரம்பரியத்தில் மசாலாக்கள் நம் உணவில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இது சுவைக்காக மட்டுமின்றி உடல் நலத்திற்காகவும் தான். ஜீரண சக்தியை அதிகரித்து, சத்துகளை உடலில் எளிமையாக சேர்க்கும். 

5. சுத்தம் செய்யும் 

உடலின் உள்ளேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஜீரணசக்தியை குறைக்கும் செயலை செய்யக்கூடாது. தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து உணவு உட்கொள்ள கூடாது. பசி எடுக்கும் பொழுது சாப்பிட வேண்டும், உணவுக்கான நேரத்தை நம் உடல் தானாகவே பொருத்திக்கொள்ளும். அந்த நேரத்தில் உணவை உண்ண வேண்டும். வேகமாக சாப்பிடாமல், பொறுமையாக அரைத்து சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 

Listen to the latest songs, only on JioSaavn.com

6. தண்ணீர் 

நம் உடம்பை எப்பொழுதும் நீர் சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான நீரை எடுக்கவில்லை என்றால் சர்மம் பாழாகும். மிக குளிர்ந்த நீரை தவிர்த்த சாதாரண நீரை அருந்த வேண்டும், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். 

Commentsஆயுர்வேதமானது நம் ஐந்து உணர்ச்சிகளோடு வளர்சிதை மாற்றத்தைக் கூறுகிறது. தொட்டு, பார்வை, சுவை மற்றும் வாசனையால் நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் நம்மில் ஒரு பகுதிதான். நன்மையான வாழ்விற்கு சிறந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்போம் 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement