நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிச்சடி!!

100 கிராம் கம்பில் 12 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  42 கிராம் கால்சியம் இருக்கிறது.  கம்பு சிறந்த ப்ரீபையோடிக் உணவு என்பதால் குடலில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 25, 2019 16:38 IST

Reddit
Diabetes Diet: Bajre Ki Khichdi Benefits And Recipe To Regulate Blood Sugar
Highlights
  • கம்பு நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
  • நார்ச்சத்து மற்றும் மக்னீஷியம் கம்பில் நிறைந்திருக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகள் கம்பு சேர்த்து உணவுகளை சாப்பிடலாம்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்காது.  முழுதானியங்கள், நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதே நீரிழிவு நோய்க்கு உகந்தது.  இந்திய உணவுகளில் பெரும்பாலும் முழுதானியங்களே பயன்படுத்தப்படுகிறது.  சிறுதானியங்களே நம் பாரம்பரிய உணவாக இருந்தது.  அப்படிப்பட்ட சிறுதானியமான கம்பு ஆரோக்கியம் நிறைந்தது.  நீரிழிவு நோயாளிகளுக்கு கம்பு எப்படியான நன்மைகளை செய்கிறதென பார்ப்போம்.  cd39cs6o 

நன்மைகள்: 

கம்பில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைக்கவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது.  கம்பு க்ளூட்டன் ஃப்ரீ என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.  100 கிராம் கம்பில் 12 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  42 கிராம் கால்சியம் இருக்கிறது.  கம்பு சிறந்த ப்ரீபையோடிக் உணவு என்பதால் குடலில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.  கம்பில் மக்னீஷியம் இருப்பதால் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.  கம்பு கொண்டு எப்படி கிச்சடி செய்வதென்று பார்ப்போம்.  கம்பு கிச்சடி: 

கம்பு இரண்டு பங்கு, பாசிப்பருப்பு ஒரு பங்கு சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.  

நான்கு விசில் வரும்வரை வைத்திருக்கவும்.  

தனியாக ஒரு பேனில் நெய் ஊற்றி, அதில் சீரகம், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். 

வேக வைத்த கம்பை எடுத்து அந்த பேனில் சேர்த்து கலந்து கொள்ளவும்.  

நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டுமே இருப்பதால் பருப்புகளுக்கு நிகரான சத்து சிறுதானியத்திலும் இருக்கிறது.  செரிமானத்திற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement