உடல் எடை குறைக்க புதுமையான முட்டை ரெசிபி!!

முட்டையை மைக்ரோவேவ் அவனில் வைத்து சமைத்தால் அதன் ருசியும் மணமும் மாறாமலும் ஆரோக்கியம் குறையாமலும் இருக்கும். 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 25, 2019 13:20 IST

Reddit
Bake Your Eggs To Create Some Unique, Weight-Loss-Friendly And Delicious Meals (Recipes Inside)
Highlights
  • முட்டையை காலை உணவாக சாப்பிடுவது நல்லது.
  • முட்டையை வெவ்வேறு விதமாக செய்து சாப்பிடலாம்.
  • முட்டையை பேக் செய்து சாப்பிடுவதால் அதன் ருசி மாறாமல் இருக்கும்.

புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது முட்டை.  முட்டையை காலை உணவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.  ஆம்லெட், ஃப்ரென்ச் டோஸ்ட், சாண்ட் விச் போன்ற முட்டை ரெசிபிகளையே நாம் தொடர்ந்து சாப்பிட்டு சலிப்புக்குள்ளாகியிருப்போம்.  சற்று வித்தியாசமாக முட்டையை எப்படி பேக் செய்து சாப்பிடலாம் என்பது குறித்து தான் இந்த கட்டுரை.  முட்டையை மைக்ரோவேவ் அவனில் வைத்து சமைத்தால் அதன் ருசியும் மணமும் மாறாமலும் ஆரோக்கியம் குறையாமலும் இருக்கும்.  இதனை உடல் எடை குறைக்கவும் சாப்பிடலாம்.  சில முட்டை ரெசிபிகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  பேக்டு எக் வித் பீன்ஸ்: 

தக்காளி, முட்டை, பீன்ஸ், சீஸ் ஆகியவை சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வைத்து பேக் செய்யலாம். இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.  

fully loaded egg recipe

 

பேக்டு எக் வித் ஸ்பினாச்: 

முட்டை மற்றும் கீரை இரண்டுமே புரதம் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  இவை இரண்டையும் பேக் செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.  உடல் எடை குறைக்க ஏற்ற ரெசிபி இது.  

lin650d

 

பேக்டு எக் வித் சர்டின்ஸ்: 

Listen to the latest songs, only on JioSaavn.com

மீன், முட்டை, தக்காளி, மிளகு, சில மூலிகைகள் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை கட்டாயமாக நீங்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும்.  இவை அனைத்தையும் கலந்து பேக் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement