டல்லான கூந்தலுக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க்

   |  Updated: December 01, 2018 17:57 IST

Reddit
Banana For Hair: 5 DIY Banana Hair Masks For Dull And Dry Hair

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, சி, பொட்டாஷியம், நார்ச்சத்து, மக்னீஷியம், சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் 0.3 கிராம் கொழுப்பு, 1மில்லி கிராம் உப்பு, 360 மில்லி கிராம் பொட்டாஷியம், 2.6 கிராம் நார்ச்சத்து, 12 கிராம் சர்க்கரை மற்றும் 1.1 கிராம் புரதம் நிறைந்துள்ளது. வாழைப்பழம் கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பிற்கு மிகவும் நல்லது. கூந்தலை பளபளப்பாக வைத்திருப்பதோடு, பொடுகு, வறட்சி போன்றவற்றை தடுக்கும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் கற்றாலை ஹேர் மாஸ்க்

கற்றாலையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ நிறைந்திருப்பதால் ஸ்கால்பில் உள்ள இறந்த செல்களை அகற்றி கூந்தல் வளர்ச்சியை தூண்டும். கற்றாலையில் ப்ரோட்டோலைட்டிக் என்சைம் இருப்பதால் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்பட்டு, பட்டு போன்று கூந்தலை மிருதுவாக்கும். கற்றாலை மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நன்கு கலந்து மாஸ்க் போல் அப்ளை செய்தால் கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

aloe vera

தேவையானவை

 • 2-3 வாழைப்பழம்
 • 2 கற்றாலை

செய்முறை

 1. கற்றாலையில் தோலை நீக்கி விட்டு அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
 2. மிக்ஸியில் கற்றாலையின் சதைப்பகுதி மற்றும் வாழைப்பழம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 3. கெட்டியான பேஸ்டாக மாறும்வரை நன்கு அரைத்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை

 1. ஹேர் ப்ரஷ் கொண்டு இந்த பேஸ்ட்டை தலையில் தடவி கொள்ளவும்.
 2. ஸ்கால்ப் மற்றும் மயிற்கால்களில் படும்படி அப்ளை செய்ய வேண்டும்.
 3. இரண்டு மணி நேரம் வரை ஊற விடவும். பின் மைல்டு ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி கொள்ளவும்.

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்

தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு தேவையான சத்துக்களை கொடுத்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் கூந்தல் வறண்டு போகாமல் இருக்கும். வைட்டமின் கே ஸ்கால்ப்பில் பொடுகு தொல்லை ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

coconut oil

தேவையானவை

 • வாழைப்பழம் –2
 • தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
 • தேங்காய் பால் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

 1. ஒரு பௌலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து கொள்ளவும்.
 2. அத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை

 1. ஸ்கால்ப்பில் படும்படி கூந்தலை நன்கு வகிடெடுத்து மயிற்கால்களில் படும்படி தடவி கொள்ளவும்.
 2. ஷவர் கேப் பயன்படுத்தி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 3. பின் ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி விடவும்.

வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஹேர் மாஸ்க்

பப்பாளி கூந்தலை அடர்த்தியாக வளர செய்யும். இதில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வை தடுத்து, கூந்தலை உறுதியாக்கும்.

papaya

தேவையானவை

 • வாழைப்பழம் – 2
 • பப்பாளி – ½
 • தேன் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

 1. வாழைப்பழம் மற்றும் பப்பாளியை சிறு துண்டுகளாக வெட்டி மசித்து கொள்ளவும்.
 2. அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை

 1. கூந்தல் அடி முதல் நுனி வரை இந்த மாஸ்க்கை தடவவும்.
 2. ஷவர் கேப் அணிந்து அரை மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
 3. பின் குளிர்ந்த நீரால் ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசிவிடவும்.

வாழைப்பழம் மற்றும் பால் ஹேர் மாஸ்க்

பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கேசின் புரதம் நிறைந்திருப்பதால், கூந்தலை ஈரப்பதத்துடனும் உறுதியாகவும் வைத்திருக்கும். வறண்ட கூந்தலுக்கு பால் சிறந்த தீர்வாக இருக்கும். வாழைப்பழம் மற்றும் பால் உங்கள் கூந்தலை பொலிவாக மாற்றிவிடும்.

milkshake

தேவையானவை

 • வாழைப்பழம் -1
 • பால் – 100மிலி

செய்முறை

 1. ஒரு பௌலில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 2. மிக்ஸியில் வெட்டி வைத்த வாழைப்பழத்தை போட்டு அரைத்து கொள்ளவும்.
 3. அத்துடன் பால் சேர்த்து அரைத்து கெட்டியான பேஸ்டை தயாரித்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை

 1. இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும்.
 2. அரைமணி நேரம் வரை வைத்திருக்கவும்.
 3. பிசுபிசுப்பு தன்மை நீங்கும்படி மைல்டு ஷாம்பூ கொண்டு கூந்தலை அலச வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

தேன் கூந்தலுக்கு சிறந்த க்ளென்ஸராக செயல்படுகிறது. வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்து கூந்தலுக்கு உபயோகிக்கும் போது கூந்தல் பட்டு போல் மிருதுவாக இருக்கும்.

honey

தேவையானவை

 • தேன் – ½ மேஜைக்கரண்டி
 • வாழைப்பழம் – 1

செய்முறை

 1. ஒரு பௌலில் வாழைப்பழத்தை வெட்டி போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
 2. அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை

Comments

 1. ஸ்கால்ப்பில் படும்படி இந்த கலவையை அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
 2. 20 முதல் 30 நிமிடங்களை அப்படியே வைத்திருக்கவும்.
 3. பின் ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி விடவும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement