பார்லி

காலை உணவுக்கு வால்கோதுமை எடுத்து கொண்டால், இருதய செயலிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்

  |  Updated: June 12, 2018 17:57 IST

Reddit
Barley
தானிய வகைகளில் ஒன்றான வால் கோதுமை (பார்லி) கட்டுபாட்டான உடலுக்கு பெரிதும் பங்களிக்க கூடியவை. காலை உணவுக்கு பெரும்பாலும் பயன்படும் தானிய வகை. சூப், சாலட் போன்ற உணவு வகைகள் தயாரிக்க உதவுகின்றது. அதுமட்டுமின்றி, பீர் மற்றும் விஸ்கி போன்ற மதுபானங்கள் செய்யவும் பயன்படுகிறது. தண்ணீரை தக்க வைத்து கொள்ளும் கரையாத நார் சத்து நிறைந்த உணவு வால் கோதுமை.

வகைகள் 

மூன்று வகையான வால் கோதுமைகளை காணலாம் மேல் தோள் எடுக்காத வால் கோதுமை வகை, சமைப்பதற்கு கடினமாக இருக்கும். சுத்தம் செய்யப்பட்ட வால் கோதுமை, கடைகளில் கிடைக்கம். பளபளப்பான தோற்றம் கொண்டது. சமைப்பதற்கான வால் கோதுமை. 10 நிமிடங்களில் சமைத்துவிடக் கூடிய வால்கோதுமையை உணவாக எடுத்து கொள்ளலாம்.ஊட்டச்சத்து
  • உடலுக்கு தேவையான எட்டு முக்கிய அமினோ அமிலங்கள் கொண்டுள்ளது. வாரம் ஒரு முறை வால்கோதுமை உணவுகளில் சேர்த்து கொள்வதனால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • உடலில் உள்ள கொழுப்புகள் குறைய உதவும்.
  • காலை உணவுக்கு வால்கோதுமை எடுத்து கொண்டால், இருதய செயலிழப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அதிகம் கரையாத நார் சத்துகள் இருப்பதால், பெண்களுக்கு பித்தப்பையில் கல் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

உங்களுக்கு தெரியுமா?

அமெரிக்காவில் உற்பத்தியாகும் 98 சதவித வால்கோதுமை, மதுபானம் தயாரிக்க பயன்படுகிறது. பண்டைக்கால எகிப்தியர்கள், வால் கோதுமையை மத வழிபாடுகளில் பயன்படுத்தியுள்ளனர்.  எகிப்திய நாணயங்களில் வால் கோதுமை அச்சிடப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredient

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement