உடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்

ஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை இழப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகின்றனர்

   |  Updated: July 13, 2018 20:00 IST

Reddit
Barley Water For Weight Loss: How Does Jau Help You Lose Weight?
Highlights
  • எடை குறைப்பது ஒரு கடுமையான பணி
  • எடை குறைப்பதற்கான சிறந்த தூண்டுதல்களில் ஒன்று பார்லி நீர்
  • பார்லி நீர் நார்சத்து நிறைந்தது
எடை குறைப்பு என்பது அனைத்து ஆரோக்கியமான உணவுகளுக்கும் ஹாய் சொல்வதற்கும் பதபடுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளும் பாய் சொல்வதற்குமான் ஒரு நடைமுறை.! நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் ஒவ்வொரு நாளும் நீங்கள் கடந்து வரும் அவஸ்த்தையை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். எடை குறைப்பது சுலபமானது அல்ல. எடை குறைப்பு ஒரு கடுமையான பணியாக இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சிகளை பின்பற்றுவது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது என பல பணிகளை செய்ய வேண்டியிருக்கும். எனினும், உடற்பயிற்சி மற்றும் உணவுடன் சேர்ந்து சில இயற்கையான துண்டுதல்கள் உள்ளன, இது கடுமையான கொழுப்புகளைக் குறைக்க உதவும். எடை இழப்புக்கான சிறந்த தூண்டுதல்களில் ஒன்று பார்லி நீர். பார்லி என்பது ஃபைபர் நிறைந்த தானியமாகும், இது பொதுவாக அரிசி மாற்றியமைக்கப்பட்ட, ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்ற வகைகளின் கீழ் எடை இழப்பதற்கான வகையாக அறியப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை இழப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக கூறுகின்றனர்; அது எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்ப்போம்.
Newsbeep
பார்லியின் ஆரோக்கிய நலன்கள்

உடலில் கொழுப்பு அளவை குறைப்பதில் பார்லி உதவுகிறது; இது பீட்டா குளுக்கனை கொண்டிருக்கிறது. இது கொலஸ்டிரால் அளவைக் கரைக்கக்கூடிய ஃபைபர் கொண்டிருக்கிறது. பார்லி நீர் ஒரு டையூரிட்டிகாக செயல்படுகிறது, இது சிறுநீரகக் கற்களைச் சரிசெய்வதோடு சேர்த்து சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கான ஒரு இயற்கை தீர்வாக உதவுகிறது. "பார்லி நீர் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. எடை குறைப்பை ஊக்குவிக்கிறது என்று டயட்டீஸியன் ரீட்டு அரோரா கூறுகிறார். மேலும், நம் உடலைக் குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
 
barley

இங்கே பார்லி நீர் உடல் எடை குறைய எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்

1. ஜங்க் ஃபுட்ஸிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கிறது


பார்லி நீரில் நார் சத்து நிரம்பியுள்ளது. அது உங்கள் வயிற்றுப் பசியை நீண்ட காலத்திற்குக் ஏற்படுத்தாமல் தடுக்கிறது. மேலும் இது வறுத்த அல்லது ஜங்க் உணவுகளை உட்கொள்வதைத் தடுக்க உதவுகிறது. முழுமையான வயிறு மற்றும் குறைந்த பசி ஒரு ஆரோக்கியமான எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எடை குறைப்புக்காக நீங்கள் பார்லி புல் சாறு குடிக்கலாம்.

2. நல்ல செரிமான மண்டலத்தை உறுதிப் படுத்துகிறது

பார்லி நீரில் உள்ள நார் சத்து உங்கள் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்துகிறது. அதனால் ஒரு கப் முழுவதுமான பார்லி நீர் உங்கள் செரிமான மண்டலத்தை சீர் செய்கிறது. ஆயுர்வேதத்தின் கூற்றின்படி, பார்லி நீர் ஒரு செரிமான டானிக்காக கருதப்படுகிறது, இது செரிமானத்தை செயல்படுத்துவதில் உதவுகிறது, மேலும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறுகளை மேம்படுத்துகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

3. கலோரி எண்ணிக்கை

பார்லியை தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிய பிறகு, ​​கலோரி உள்ளடக்கம் தானாகவே குறைகிறது. குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக ஒரு கிளாஸ் பார்லி நீர் குடிப்பதால் உங்கள் உடம்பில் பல நன்மைகள் ஏற்படுகிறது.

 
weight loss

எடை குறைப்புக்கான பார்லி நீரை தயாரிப்பது எப்படி?

Commentsவெளியில் வாங்குவதை விட உங்கள் பார்லி நீரை வீட்டிலே தயாரியுங்கள். எடை குறைப்புக்காக பார்லி நீரை தயாரிப்பதற்கு, முத்து போன்ற பார்லிகளைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே ஒரு எளிய மற்றும் விரைவான செய்முறை:

  1. பார்லி மென்மையாகும் வரை வேகவைக்கவும் ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் என்ற கணக்கில் ஊறவைக்கவும்.

  2. இப்போது, ​​வடிகட்டி நீரை சேகரிக்கவும். தண்ணீரில் எந்த சக்கையும் காணாத வரை மீண்டும் செய்யவும்.

  3. நீங்கள் பார்லி நீர் சுவையாக இல்லையென்று உணர்ந்தால், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு அல்லது தேனை அதில் சேர்க்கவும். பார்லி நீருக்கு சில சுவையைச் சேர்க்க நீங்கள் அதனுடன் இஞ்சி அல்லது பட்டையை சேர்க்கலாம். எடை இழப்பதற்கான செயல்முறையைத் தக்கவைக்க இவை அனைத்தும் உதவுகிறது.

  4. உங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமென்றால், அதில் ஒரு தேக்கரண்டி ப்ரவுன் சக்கரை சேர்க்கவும். இது குறைவாக பதப்படுத்தப்பட்டதால் இது எடையை அதிகரிக்காது.

  5. பார்லி நீரை அதிக நாட்கள் பயன்படுத்துவதற்கு அதை ஃப்ரிட்ஜுல் வைக்கவும்.

உடற்பயிற்சிகளோடு சேர்ந்து உங்கள் தினசரி உணவுடன் பார்லி நீரை சேர்த்துக் கொள்ளவும்,இது எடை குறைப்புக்கு ஆரோக்கியமான டயட் மற்றும் ஆரோக்கியமான வழி!உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement