அஜீரணத்தை சரிசெய்யும் பிரியாணி இலை

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 01, 2018 17:39 IST

Reddit
Indigestion Problem? Here's How Bay Leaf Or Tej Patta Could Help Manage Your Tummy Troubles

பிரியாணி இலை பயன்படுத்தாத அசைவ உணவுகளே இருக்க முடியாது. இந்த இலை வாசனைக்காக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்திற்கும் சிறப்பு வாய்ந்தது. சமையலில் இதனை சேர்க்கும் போது இதில் இருந்து வெளிவரும் நற்குணம் நிறைந்த எண்ணெய் உடலில் சில அதிசயங்களை நிகழ்த்துகிறது. இந்த பிரியாணி இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை மற்றுமின்றி நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் இருதய நோய்கள், சளி, அஜீரணம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் தன்மை உண்டு.

நன்மைகள்

வயிறு மற்றும் குடல் பகுதிக்கு பிரியாணி இலை மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய ஆர்கானிக் பொருட்கள் ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் சரி செய்துவிடும். மேலும் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி ஜீரணத்தை எளிதாக்குகிறது. வயிற்று புண்களை குணமாக்கி, உணவை விரைவில் செரிக்க செய்யும் அமிலங்களை உற்பத்தி செய்யும். பிரியாணி இலையை கொண்டு எளிதாக டீ தயாரித்து தினமும் குடித்து வரலாம்.

ll3fkne

செரிமானம் சீராக இல்லாதபோது, வாயு,. அசிடிட்டி போன்றவை ஏற்படும். ஒரு பாத்திரத்தில் பொடியாக்கிய பிரியாணி இலையுடன் ஒரு கப் வெந்நீர் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அத்துடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு முடித்தபின் குடித்து வரலாம். இதனால் அஜீரண கோளாறுகள் தடுக்கப்படுகிறது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement