கோடைக்கேற்ற குளிர்ச்சி பானம்!!

உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும்.  இதனால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 07, 2019 16:03 IST

Reddit
Summer Drink: Beat The Heat With This Kiwi And Banana Mint Beverage
Highlights
  • கோடையில் அடிக்கடி குளிர்ச்சி பானங்கள் எடுத்து கொள்வது நல்லது.
  • கிவி மற்றும் வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது.
  • உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க புதினா சேர்த்து கொள்ளலாம்.

கோடையில் வியர்வை அதிகபடியாக வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.  உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் செரிமான பிரச்சனை உண்டாகும்.  இதனால் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  கூந்தல் மற்றும் சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  அதேபோல நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.  பழச்சாறுகள், ஸ்மூத்தீஸ் மற்றும் சாலட்களை சாப்பிடலாம்.  வாழைப்பழம், கிவி மற்றும் புதினா சேர்த்து எப்படி கோடைக்கேற்ற குளிர்ச்சி பானத்தை தயாரிப்பதென்று பார்ப்போம்.  n658pad8

 

தேவையானவை: 

கிவி - 1 

வாழைப்பழம் - 1 

புதினா - 1 கொத்து 

தண்ணீர் - அரை கப் 

தேன் - 1/2 மேஜைக்கரண்டி 

பூசணி, ஆளி மற்றும் சூரியகாந்தி விதைகள் - தேவையான அளவு 

vjj6fsko

 

Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை:

கிவி மற்றும் வாழைப்பழ தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.  காய்ந்த புதினா இலைகளையும் பயன்படுத்தலாம்.  ஒரு மிக்ஸியில் கிவி மற்றும் வாழைப்பழம் மற்றும் புதினா சேர்த்து அரைத்து கொள்ளவும்.  பின் அதில் தேன், விதைகள் சேர்த்தும் அரைத்து கொள்ளவும்.  சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஐஸ் சேர்த்து பருகலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement