சருமத்தை பராமரிக்க உதவும் முல்தானி மிட்டி

சருமத்தின் மீது முல்தானி மிட்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்

 , NDTV  |  Updated: October 31, 2018 00:19 IST

Reddit
10 Benefits of Multani Mitti for Face and Hair: A Well-Rounded Beauty Regime

முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொழிவு பெற செய்கிறது. முகத்தில் உள்ள எண்ணெய், அழுக்கு, வியர்வை ஆகியவற்றை நீக்கி முகத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. சருமத்தின் மீது முல்தானி மிட்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

multani mitti pack

முல்தானி மிட்டியின் பயன்கள்

  1. முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கிவிடுகிறது.
  2. முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை அகற்றிவிடுகிறது.
  3. முகத்திலுள்ள அழுக்கு, வியர்வை போன்றவற்றை க்ளென்ஸ் செய்கிறது.
  4. சருமத்தின் பொழிவை அதிகரிக்கிறது.
  5. முகத்திலுள்ள கருமையை போக்குகிறது.
  6. வெய்யிலின் தாக்கத்தால் ரேஷஸ், நோய்தொற்று ஏற்படாமல் இருக்கும்.
  7. பூச்சிக்கடி, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.
  8. இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்க செய்கிறது.
  9. முகத்தில் உள்ள ப்ளாஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கிவிடுகின்றன.
  10. இதில் ஆண்டிசெப்டிக் தன்மை நிறைந்திருக்கிறது.

எண்ணெய் சருமத்திற்கு

Newsbeep

ஆரஞ்சு தோல் பொடி, முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி உலர்ந்ததும் கழுவி விடவும். மாதம் இரண்டு முறை தவறாமல் செய்து வர முகத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

fuller's earth for beauty

கருவளையம்

உருளைக்கிழங்கை துருவி அதில் எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி ப்ரஷ் க்ரீம், முல்தானி மிட்டி ஆகியவற்றை நன்கு கலந்து கண்களை சுற்றி தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவவும்.

dark circles

ஸ்க்ரப்

ஆரஞ்சு பொடி, சந்தன பொடி மற்றும் முல்தானி மிட்டி, துளசி, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இரண்டு முறை முகத்திற்கு தடவி வர முகத்திற்கு சிறந்த ஸ்க்ரபாக செயல்படும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை மென்மையாக வைத்திருக்கும்.

skin

ஃபேஸ் மாஸ்க்

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றது இந்த முல்தானி மிட்டி. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை, ஜவ்வரிசி மற்றும் ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டி சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இறுதியாக முகத்திற்கு மாய்சுரைசர் தடவி கொள்ளுங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

face pack
 

கூந்தல் வளர்ச்சிக்கு

மூன்று தேக்கரண்டி முல்தானி மிட்டியை முட்டையுடன் கலந்து, அத்துடன் நெல்லிக்காய், எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி பீர் ஆகியவற்றை நன்கு கலந்து தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து அலசிவிடவும். இதனால் கூந்தல் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Comments

oily skin


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement