சாம்பாரில் இவ்வளவு நன்மைகளா?

   |  Updated: August 03, 2018 19:16 IST

Reddit
Benefits of Sambar: 6 More Reasons To Love The South Indian Sensation
Highlights
  • சாம்பாரில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளன
  • காய்கறிகள், மசாலா பொருட்கள் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானது
  • உடல் எடை குறைவு உணவுகளில் சாம்பார் சேர்த்து கொள்ளலாம்.

சவுத் இந்தியன் உணவு வகைகளில் பிரபலமான சாம்பார், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எளிதாக செய்யக் கூடிய சாம்பாரில், காய்கறிகள், பருப்பு, மசாலா பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. விருப்பத்திற்கு ஏற்ற காய்கறி வகைகளை சாம்பாரில் சேர்த்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான குணநலன்களை சாம்பார் கொண்டுள்ளது. சுவையாகவும், எளிதாக செய்யக் கூடியதாகவும் சாம்பார் உள்ளது. சாம்பார் எடுத்து கொள்வதினால், உடலுக்கு ஏற்படும் 6 நன்மைகளை பார்ப்போம்

1. புரதச்சத்து

புரதச்சத்து அதிகம் நிறைந்த பருப்புகளை கொண்டு சாம்பர் தயாரிக்கப்படுகிறது. சைவ உணவு பிரியர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக சாம்பார் உள்ளது. முட்டை, மீன், போன்ற உணவுகளில் இருக்க கூடிய புரதச்சத்து அளவு சாம்பாரிலும் உள்ளது. உடல் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் முக்கியமானது.

sambar

2. நார்ச்சத்து

புரதச்சத்து மட்டுமின்றி அதிக நார்ச்சத்துக்களும் சாம்பாரில் உள்ளன. தக்காளி, முருங்கை, கத்திரிக்காய், பூசணி போன்ற ஆரோக்கியமான காய்கறிகளை சாம்பாரில் சேர்த்து கொள்ளலாம். அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள் இருதயத்திற்கு ஆரோக்கியமானது
 

drumsticks

3. ஆண்டி-ஆக்ஸிடண்ட்

பருப்பு வகைகளில் அதிக வைட்டமின்ஸ், மினரல்ஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகள், மசாலா பொருட்கள் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கின்றன. புளிச்சாறு, மஞ்சள் தூள், கரிவேப்பிலை, மிளகு ஆகியவை உடல் ஜீரணத்திற்கு உதவுகின்றன
 

curry leaves

4. செரிமானம்

சாம்பார் எடுத்து கொள்வதினால், அஜீரண பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, சாம்பார் சாப்பிடுவதனால், சீரான செரிமானம் ஏற்படுகின்றது

better digestion

5. உடல் எடை குறைவு

உடல் எடை கட்டுக்குள் வைத்து கொள்ள, ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, உடல் எடை குறைவு உணவுகளில் சாம்பார் சேர்த்து கொள்ளலாம்.

weight loss

6. டி-டாக்ஸ் நன்மைகள்

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாம்பாரில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களை குறைத்து கொள்ள வேண்டும். மேலும், சாப்பாடிற்கு பதிலாக இட்லியுடன் சாம்பார் எடுத்து கொள்ளலாம். வேகவைத்த காய்கறிகள், மசாலா பொருட்கள், பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சாம்பார், டி-டாக்ஸ் குணநலன் கொண்டுள்ளது.

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement