விநாயகர் சதுர்த்தியை அசத்தும் சுவையான இந்திய உணவு வகைகள்!

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி அன்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகளை செய்து மகிழுங்கள்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 12, 2018 23:07 IST

Reddit
Ganesh Chaturthi 2018: 9 Best Ganesh Chaturthi Dishes To Celebrate With

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்குப் படைத்து வழிபட வேண்டும். வெவ்வேறு மாநிலங்களில், வித்தியாசமான உணவு வகைகளைப் படைத்து வழிப்படுவது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி அன்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகளை செய்து மகிழுங்கள்

கொழுக்கட்டை
வெல்லம், தேங்காய், ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு உணவாகும். அந்நாளில் காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகை கொழுக்கட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, வித்தியசமான சாக்குலேட் ஸ்டஃப்டு கொழுக்கட்டையை முயற்சி செய்து பாருங்கள்

modak

விநாயகர் சதுர்த்தி சிறப்பு இனிப்பாக கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது

லட்டு
லட்டு வகைகள் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் ஒன்று. வகையான லட்டுகள் தயாரிக்கலாம். ரவா லட்டு, தேங்காய் லட்டு, ராகி லட்டு, ஓட்ஸ் லட்டு ஆகியவற்றை முயற்சி செய்து பாருங்கள்

கடலை மாவு லட்டு
லட்டு வகைகளிலேயே எளிமையாக செய்ய கூடிய கடலை மாவு லட்டு இந்த பண்டிகை காலத்தில் சிறப்பானதாகும்.

ladoo

கடலை மாவு லட்டு இனிப்புகளை எளிதாக செய்யலாம்

வாழைப்பழ அல்வா
வாழைப்பழம், நெய், தேன், ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் அல்வா, புது வகையான ஆரோக்கியமான இனிப்பாக அமையும்

nralqs58

இனிப்பான பாதம் அல்வா சுவையானதாக இருக்கும்

ஆப்பிள் பாயாசம்
வழக்கமான பாயாசத்துடன், ஆப்பிள் பழங்களை சேர்த்து தயாரித்தால் பாயாசத்தின் சுவை கூடும். உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

mt9sa5e

ஆப்பிள் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியமானது

பாதாம் அல்வா
பால், ஆல்மண்ட் சேர்த்து தயாரிக்கப்படும் பாதம் அல்வா சுவையான இனிப்பு வகையாக அமையும்

பூரி மசால்
சுவையான பூரி மசால் தயாரிப்பது பண்டிகை தின காலை உணவின் சிறப்பு.

வரன் பாத்
மகாராஷ்டிரா மாநில உணவு வகையான வரன் பாத், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது படைக்கப்படுகின்றன. அரிசி, துவரை, உருளை கிழங்கு, பருப்பு ஆகியவற்றை சேர்த்து இது தயாரிக்கப் படுகிறது.

சாவ்லி உசல்
சாவ்லி என்றால் காராமணி. இந்த உணவு வகை தயாரிக்க காராமணி, தேங்காய், மசாலா ஆகியவை சேர்த்து இது தயாரிக்கப் படுகிறது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement