ஆயுளை குறைக்கும் ப்ரோட்டீன் பவுடர்!!!

இந்த ப்ரோட்டீன் பவுடர்களில் Branded-chain amino acid இருக்கிறது.  இவை உடலில் தசை வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை கெடுக்கவும் செய்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 02, 2019 13:17 IST

Reddit
Beware! Excessive Consumption Of Protein Powders May Reduce Lifespan, Lead To Weight Gain

உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் இன்றியமையாதது.  இது தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பராமரிக்கவும் செய்கிறது.  நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவில் புரதம் நமக்கு முழுதாய் கிடைத்துவிடுவதில்லை.  அதுவும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு புரதம் சற்றே சவால் தான்.  இதன் காரணமாகவே சைவ பிரியர்கள் புரத பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்.  தற்போது ப்ரோட்டீன் ஷேக்ஸ் மிகவும் பிரபலம்.  மில்க்‌ஷேக் மற்றும் ஸ்மூத்திகளில் வே ப்ரோட்டீன் சேர்க்கப்படுகிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ப்ரோட்டீன் ஷேக்கில் உடலுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இவை உடல் பருமனை அதிகரிப்பதோடு உணர்ச்சி நிலைகளிலும் பிரச்னையை உண்டாக்குகிறது. ப்ரோட்டீன் பவுடரின் பக்கவிளைவுகள்:

இந்த ப்ரோட்டீன் பவுடர்களில் Branded-chain amino acid இருக்கிறது.  இவை உடலில் தசை வளர்ச்சியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை கெடுக்கவும் செய்கிறது.  Nature Metabolism என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டதாவது, தொடர்ச்சியாக ப்ரோட்டீன் பவுடர்களை பயன்படுத்தி வந்தால் ஆயுட்காலம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் உடலில் அமினோ அமிலத்தில் மாறுபாடு ஏற்படுவதோடு உடல் பருமனும் அதிகரிக்கிறது.  மேலும் இனபெருக்கம், முதிர்ச்சி, உடல் பருமன் மற்றும் மெட்டபாலிஸம் போன்றவற்றில் இந்த ப்ரோட்டீன் பெரும் பிரச்னையை உண்டாக்குகிறது. ajc6ojso

இந்த சோதனை எலிகளில் நடத்தப்பட்டது.  BCAA இரண்டு மடங்காக, அதாவது, 200 சதவிகிதம் ஒரு எலிக்கு கொடுக்கப்பட்டது.  மற்றொன்றிற்கு 100 சதவிகிதம், 50 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் என பிரித்து வழங்கப்பட்டது.  அதில் 200 சதவிகிதம் கொடுக்கப்பட்ட எலி அதிகபடியான உணவை உட்கொண்டு உடல் பருமன் அடைந்ததோடு, மகிழ்ச்சிக்காக மூளையில் சுரக்கக்கூடிய செரடோனின் ஹார்மோனை பாதித்தது.  செரடோனின் அளவு குறைந்ததால், உடல் பருமன் அதிகரித்து, அதன் ஆயுட்காலமும் குறைந்துவிட்டது. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த ப்ரோட்டீன் பவுடர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.  நல்ல வடிவமான உடல் அமைப்பு வேண்டும் என்பதால் இந்த ப்ரோட்டீன் பவுடர்களை உட்கொள்கிறார்கள்.  ஆனால் இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல ஆயுட்காலத்தையும் குறைக்கும் காரணியாக இருக்கிறது என்பதால் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.  இயற்கை உணவுகளிலும் புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாய் இருக்கிறது.  அவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதுதான் சிறந்தது.  அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலே போதும்.  உடல் எடை சீராக இருப்பதோடு ஆரோக்கியமும் பாதிக்காமல் இருக்கும். 

 

Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com