நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து பாதுகாகும் பாகற்காய் டீ!

காய்ந்த பாகற்காய் தூண்டுகளைத் தண்ணீரில் போட்டு ஒரு மருத்துவ டீயாக விற்கப்படுகிறது

Sakshita Khosla  |  Updated: June 28, 2018 23:56 IST

Reddit
Bitter Gourd Tea: How To Make This Herbal Tea To Manage Diabetes And Fight Cholesterol
Highlights
  • பாகற்காயின் இலைகள், விதைகள், பழங்களைக் கொண்டு டீயை தயாரிக்கலாம்
  • பாகற்காய் டீ இரத்தச் சக்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது
  • பாகற்காய் டீ கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
பாகற்காய் நம்பமுடியாத பல நன்மைகளை நம் உடல் ஆரோக்கியத்துக்கு தருகிறது என்பதை தெரிந்தும் நம்மில் பலருக்கு பாகற்காய் பிடிப்பதில்லை. பல வருடங்களாக தாய்மார்கள் பாகற்காயை சாப்பிட வைக்க பல முயற்சிகளை எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. எப்படி கிரியேட்டிவாக சமைக்கப்பட்டிருந்தாலும், பல மாசாலாக்களை வைத்து இதன் கசப்புச் சுவையை மாஸ்க் செய்ய முயற்சித்தாலும் இரவு உணவு மேஜையில் இக்காயை பார்த்தால் முகங்கள் சுழிக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இந்தியர்கள் இதில் புளிப்புச் சுவையையும்,  மாசாலக்களையும் சமைக்கும் பொழுது சேர்த்ததால் இதைச் சாப்பிட முடிந்தது.பாகற்காய் சுவையில் பிரபலமற்றதாக இருந்தாலும், ஆரோக்கிய
நலன்களால் இது செல்வாக்கை பெற்றிருந்தது, இதில் இருக்கும் ஊட்டச்சத்திற்காக நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு இது அவசியமானதாகும்.பாகற்காயை ஸ்மூத்தீஸ் மற்றும் பச்சை சாறுகளில் சேர்ப்பதால்,அவற்றின் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கின்றன.பாகற்காய் சாறின் முக்கிய பயன் இது இரத்தச் சக்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதன் வியக்கத்தக்க நன்மைகளில் மற்றொன்று கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்கிறது. மேலும்
உடல் இடையை குறைக்கிறது.

பாகற்காய் டீ 
பாகற்காயின் நலன்களை பெற மற்றொரு வழி இருக்கிறது அது பாகற்காய் டீ.
பாகற்காய் டீ ஒரு ஹெர்பல் டிரிங்க்.இது காய்ந்த பாகற்காய் தூண்டுகளைத் தண்ணீரில் போட்டு ஒரு மருத்துவ டீயாக விற்கப்படுகிறது. பாகற்காய் டீ பௌடராக மற்றும் சாறாகக் கிடைக்கிறது.இது கோஹை டீ என்றும் அறியப்படுகிறது மற்றும் இதை சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம். பாகற்காய் சாறுப் போல்லல்லாமல், பாகற்காய் டீயை அதன் இலைகள், விதைகள்,மற்றும் பழங்கள் அனைத்தையும் ஓரே
நேரத்தில் பயன்படுத்தி தயாரிக்கலாம்.
bitter gourd tea

இதோ பாகற்காய் டீயின் சில நன்மைகள்:

1. இரத்தச் சக்கரை அளவை கட்டுபடுத்துகிறது
இரத்தச் சக்கரை அளவை கட்டுபடுத்தவும் ,நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் பாகற்காய் இயற்கையான பரம்பரிய உணவு. பாகற்காய் டீ நீரிழிவு நோயுக்கும் உதவுகிறது.

2. கொலஸ்ட்ராலை குறைக்க 
பாகற்காய் டீ கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.இது பாகற்காயில் இருக்கும் அண்டி-இன்ஃபல்மெட்டரி பண்புகளால் தான்.

3. கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
பாகற்காய் டீ கல்லீரல் மற்றும் குடலை தூய்மைப்படுத்த உதவுகிறது.இது அஜீர்ணத்தை சீர் செய்கிறது.

4. நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேன்படுத்துகிறது.
பாகற்காயில் இருக்கும் வைட்டமீன் சி ,டீயை தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேன்படுத்துகிறது.

Comments5. கண்பார்வையை அதிகரிக்கும்.
பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ பாகற்காய் டீ மூலம் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் முன்னோடி, இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும்.​

bharwan karela


About Sakshita KhoslaSakshita loves the finer things in life including food, books and coffee, and is motivated by self-indulgence and her love for words. When not writing, she can be found huddled in the corner of a cosy cafe with a good book, caffeine and her own thoughts for company.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement