உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் காய்கறிகள்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: November 17, 2018 00:19 IST

Reddit
High Blood Pressure Management: 5 Winter Vegetables To Manage Hypertension

உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. தற்போது இளைய தலைமுறையினருக்கும் இரத்த அழுத்த பிரச்சனை உருவாகியிருப்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். இரத்த அழுத்தம் 120/80mmHg யாக இருந்தால் உடனடியாக இருதய நோய் நிபுணரை அணுகிவிடுங்கள். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பக்கவாதம், இரத்த ஓட்டம் தடைபடுதல், தமணிகளில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில காய்கறிகள் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கக்கூடியதாக இருக்கும். அப்படியான காய்கறிகள் என்னவென்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

கேரட்

கேரட்டில் பொட்டாஷியம் நிறைந்துள்ளது. ஒருவரின் கோபத்தை தளர்த்த உடலில் பொட்டாஷியம் இருப்பது அவசியம். இது உடலில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் தமணிகளில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். உடலில் சோடியம் ஏற்படுத்தும் தீமைகளை குறைத்துவிடும். கேரட் ஜூஸ் அல்லது சூப் குடித்து வந்தால் அத்ரோஸ்க்லீரோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகியவை தடுக்கப்படும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் இருக்க கூடிய வைட்டமின் பி சத்து நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட், நைட்ரிக் ஆக்ஸைடு என்னும் வாயுவை உருவாக்கும். இந்த வாயு இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். ஒரு டம்ளர் பீட்ரூட் சாறு குடித்து வந்தால் உடலில் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

கீரைகள்

கீரையில் பொட்டாஷியம் மற்றும் லுடின் நிறைந்திருக்கிறது. இந்த லுடின் தமணிகளின் சுவர்களை உறுதியாக்கும். இதனால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது. மேலும் கீரைகளில் பொட்டாஷியம், ஃபோலேட் மற்றும் மக்னீஷியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. கீரைகளில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. கீரைகளை சாலட், சாண்ட்விச் அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம்.

ge7lbvvg

முள்ளங்கி

முள்ளங்கியில் பொட்டாஷியம், இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். முள்ளங்கி சூப் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம்.

வெந்தயக்கீரை

வெந்தய கீரை மற்றும் வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால், குறிப்பாக LDL கொழுப்பு குறைகிறது. வெந்தயக்கீரை மற்றும் வெந்தயத்தில் சோடியம் அளவு மிகவும் குறைவு என்பதால் உணவில் இதனை தினசரி சேர்த்து கொள்ளலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement