இதயத்துக்கு ஏற்ற ஹெல்தி டின்னர்கள்!

மஞ்சள் பூசணி மற்றும் ஆலிவ் ஆயிலில் ஒமேகா 3, 6 மற்றும் 9 ஃபேட்டி ஆசிட்கள் இருப்பதால் இருதயத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சீராகக் கிடைக்க வழிசெய்கிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 04, 2019 12:20 IST

Reddit
Boost Your Heart Health With This Heart-Healthy Dinner

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எப்போதும் உடல் நலமும், மனநலமும் நன்றாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிக மோசமான விளைவுகளைத் தந்துவிடும். கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் சேரும்போது அதிகம் பாதிப்படைவது இதயம்தான். சிறிதளவு சிகப்பு அல்லது மஞ்சள் குடைமிளகாய், ஷிடேக் மஸ்ரூம், மஞ்சள் பூசணி அல்லது வெண்ணெய் அல்லது லீமா பீன்ஸ், பூண்டு ஆகியவற்றை இரவு உணவில் சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி இதயத்துக்கு வலு சேர்க்கலாம்.

'Healing Foods' என்ற புத்தகத்தில், உலர்ந்த பீன்ஸ்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பையும், சர்க்கரையையும் சேராமல்  உதவுவதாகத் தெரிவிக்கிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், ஷிடேக் காளான்கள் இருதயம் சம்பந்தமான நோய்களை தடுப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும், ஹெல்தியானது மட்டுமல்ல, வயிறுக்கும் லைட்டானது. இதனால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். 

சிகப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாயில் வைட்டமின் E, C, மற்றும் K உள்ளது. இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது. மஸ்ரூமில் உள்ள நற்குணங்கள் நரம்பு மண்டலத்திற்கு சிக்கலாக இருக்கும் பிரச்னைகளை சரிசெய்கிறது. ஸ்ட்ரெஸ் குறையவும் உதவுகிறது. பூண்டில் இயற்கையாகவே ரத்த நாளங்களை சீர்செய்யும் மருத்துவ குணங்கள் இருப்பதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. வெண்ணெய். லீமா பீன்ஸ் இவற்றால், நல்ல கொழுப்பு உடலில் சேர்கிறது.  கெட்ட கொழுப்பைக் குறைத்து நார்ச்சத்தின் பலமும் கிடைக்கிறது. மஞ்சள் பூசணி மற்றும் ஆலிவ் ஆயிலில் ஒமேகா 3, 6 மற்றும் 9 ஃபேட்டி ஆசிட்கள் இருப்பதால் இருதயத்துக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சீராகக் கிடைக்க வழிசெய்கிறது. ஆலிவ் ஆயிலை குறைந்த அளவே பயன்படுத்துவது நல்லது. அதிகம் சேர்ப்பதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காகும். . 

ஒருவேளை டின்னரை நீங்கள் சமைக்க நேர்ந்தால், இதயத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து மேலே சொன்ன உணவுகளை சேர்த்து பயனடையுங்கள். உங்களுக்கும் இதுபோல பொருட்களை வைத்து ரெசிப்பிகள் செய்யத் தெரிந்தால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் அனுப்பவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com