சலிப்பைத் தரும் காலை உணவைத் தவிர்த்து இந்த ஓட்ஸின் சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் மூலம் நாளை ஆரோக்கியமாக்குங்கள்!

பால், நட்ஸ், ஃப்ரூட்ஸ், தேன் என அனைத்திலும் கலந்து சாப்பிடுவதால் முழு நற்குணங்களும் கிடைக்கிறது.

   |  Updated: March 21, 2019 19:00 IST

Reddit
Boring No More! 4 Delicious Ways Of Sprucing Up Your Breakfast Oatmeal
Highlights
  • Oatmeal is hands down the best breakfast for all ages
  • Oatmeal is low in calories and loaded with dietary fibre
  • Dark cocoa, whole egg, caramelised fruit can all spruce up breakfast

8 மணி நேரத்தூக்கத்துக்குப் பிறகு, நமது வயிறு காலியாகத்தான்  இருக்கும். அதனால்தான் காலை உணவு அவசியமானது என அனைத்து டாக்டர்களால் ரெகமண்ட் செய்யப்படுகிறது. காலை உணவில் ஓட்ஸ் மிகச்சிறந்த ஒன்று. கெமிக்கல்கள் நிறைந்த வெள்ளை பிரெட்டுக்கு பதிலாக ஓட்ஸை எடுத்துக்கொள்ளலாம். அதோடு இல்லாமல் ஓட்ஸை ஈஸியாகவும் சமைக்கலாம். பேன்கேக்ஸ், குக்கீஸ், கப்கேக் என அனைத்து விதமான பேக்கரி பொருட்களிலும் பயன்படுத்தலாம். சமைப்பதற்கான நேரத்தைக் குறைவாக எடுத்துக்கொள்ளும் ஓட்ஸில் ஒரு துளிகூட எண்ணெய்கூட சேர்க்காமல் சமைக்கலாம். பால், நட்ஸ், ஃப்ரூட்ஸ், தேன் என அனைத்திலும் கலந்து சாப்பிடுவதால் முழு நற்குணங்களும் கிடைக்கிறது. உலகில் பல மக்கள் ஒரு கப் ஓட்ஸை தங்களது காலை உணவாக ஓட்ஸைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. 

Newsbeep

ஓட்ஸ் ஏன் சூப்பர்ஃபுட்?

கலோரிகள் மிகமிக முறைவாகக் கொண்டது. 100கிராம் ஓட்ஸில் வெறும் 68 கலோரிகளே உள்ளது. அமெரிக்காவவின் அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட் அறிக்கையின்படி ஓட்ஸில் அதிக அலவு நார்ச்சத்தும், 0 கொழுப்பு சத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் A, மற்றும் வைட்டமின் B-6 இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோல் செய்கிறது. 

37jld46o 

ஓட்ஸை எப்படி மேலும் ஆரோக்கியமான உணவாக மாற்றுவது?

1. முட்டை

முட்டையை ஓட்ஸில் சேர்ப்பதால் ஈஸீயாகவும், நேரம் குறைவாகவும் ஒரு பிரேக்ஃபாஸ்டை நாம் தயார் செய்ய முடியும். ஒரு கப்பில் ஓட்ஸைக் கொட்டி அதில் ஒரு முட்டை அடித்து ஊற்றி வேகவைத்தால் மிருதுவான, சத்தான காலை உணவு ரெடி.

2. டார்க் கோகோவா பவுடர்/காஃபி பவுடர்

உங்கள் சத்தான் ஒரு கப் ஓட்ஸில் சாக்லேட் ஃப்ளேவர் கொண்டு அசத்துங்கள். கோகோவா ஓட்ஸில் சேர்க்கும் போது அதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் புத்துணர்ச்சியை தரும். உயர்தர கோகோவா பவுடரில் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படாமல் இருக்கும். அதனால் அது இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். மேலும் அதில், சிறிது காஃபி பவுடரை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

fms06pq8 

3. ஸ்பைஸி ஓட்ஸ்

இனிப்போ, புளிப்போ... ஓட்ஸில் கொஞ்சம் காரம் சேர்த்தால் நிச்சயம் அது உங்களுக்க்ப் பிடிக்கும். சமைத்து ஆறவைத்த ஓட்ஸில் கொஞ்சம் லவங்கப்பட்டை அல்லது லவங்கப்பட்டைப் பொடி சேர்த்தால் அதன் நறுமணத்தில் இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும். அதோடு, மஞ்சள், கிராம்பு, இஞ்சிப் பொடி மற்றும்ம் குங்குமப்பூ சேர்த்த்டால் வாசனை கமகமக்கும். வெண்ணிலா எசென்ஸும் சேர்த்து சுவைக்கலாம்.

nciekvc 

4. பழங்கள் பலன்கள்

Listen to the latest songs, only on JioSaavn.com

காலையில் எழுந்து என்ன சமைப்பது என்று பலருக்கு பெரும் சவாலாக இருக்கும். டேஸ்ட்டாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் அது ஹெல்த்தியாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஈஸி வழி ஓட்ஸில் பழங்களைச் சேர்ப்பது. ஆப்பிள், வாழைப்பழம், பியர், பைனாப்பிள் அல்லது பிரவுன் சுகர் சேர்த்து சாப்பிடலாம். 

ஓட்ஸைப் பயன்படுத்தி நீங்களே சொந்தமாக யோசித்து பல வகையான ரெசிப்பிகலை செய்துபார்த்து பலனடையலாம். நிச்சயம் அது உங்கள் காலை உணவை ஹெல்தியாகாவும், நாள் முழுவதும் உற்சாகமாகவும் வைத்திருக்கும். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement