முட்டையா? தானியங்களா? காலை உணவிற்கு எது சிறந்தது?

காலை உணவிற்கு தானியங்கள் மற்றும் முட்டை என இரண்டுமே சிறந்ததுதான் என்பதால் இரண்டையுமே சரிவிகிதத்தில் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

   |  Updated: April 02, 2019 12:40 IST

Reddit
Breakfast Cereal Versus Eggs: Which One Makes For A Healthier Morning Meal?
Highlights
  • காலை உணவை எப்பொழுதுமே ஆரோக்கியமானதாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை, சோடியம் மற்றும் கலோரிகள் குறைவான முழுதானியங்களை சாப்பிடலாம்.
  • கோதுமை ப்ரட்டுடன் முட்டை சேர்த்து சாப்பிடலாம்.

காலை உணவை ஒருவரது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.  காலை உணவை தவறாமல் சாப்பிடுவதனால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் வராமல் தடுக்க முடியும்.  மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி, உடல் பருமனாகாமல் இருக்கும்.  காலை உணவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.   அப்படியான உணவுகளில் முக்கியமானது முட்டை மற்றும் தானியங்கள்.  ஆனால் தற்போது இந்த இரண்டு உணவுகளிலும் எது ஆரோக்கியமானது என்பதை பார்ப்போம். 

h68tdsh8

ஆரோக்கியம் நிறைந்தது எது?

Newsbeep

தற்போது அனைவருக்குமே உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  இதன் விளைவாக, மார்கெட்டில் விற்கக்கூடிய செரல்ஸை வாங்கி காலை உணவாக சாப்பிடும் பழக்கம் அதிகமாகிவிட்டது.  ஆனால் மார்கெட்களில் நன்கு பேக் செய்யப்பட்டு விற்கப்படும் உணவுகளில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம்.  ஆரோக்கியமான காலை உணவு என்பதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  தானியங்களை சாப்பிட எண்ணினால், ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசி போன்ற முழுதானியங்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். 

Listen to the latest songs, only on JioSaavn.com

கண்களை கவரும் பேக் செய்யப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு சோடியம் மற்றும் செயற்கையான ஃப்ளேவர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.  இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  அதனால் உங்கள் காலை உணவாக முழுதானியங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், பழங்கள் மற்றும் பால் சேர்த்து கொள்ளலாம்.  இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின், புரதம் மற்றும் இயற்கையான இனிப்பு சுவையும் இருக்கிறது.  அதேபோல் முட்டையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  நார்ச்சத்தை தவிர, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக இருக்கிறது என்பதால் காலை உணவிற்கு முட்டை சிறந்தது. 

காலை உணவிற்கு தானியங்கள் மற்றும் முட்டை என இரண்டுமே சிறந்ததுதான் என்பதால் இரண்டையுமே சரிவிகிதத்தில் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement