பாசிப்பருப்பு ஆம்லெட் செய்வது எப்படி??

புரதத்தை உணவில் சேர்த்து கொள்ள சரியான நேரம் காலை.  காலை உணவிற்கு நீங்கள் புரதத்தை எடுத்து கொள்வதால் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடிகிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 14, 2019 12:13 IST

Reddit
High-Protein Breakfast: Moonglet, A Moong Dal Omelette That May Help You Lose Weight
Highlights
  • பாசிப்பருப்பில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.
  • காலை உணவிற்கு புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
  • வீகன் டயட்டில் இருப்பவர்கள் பாசிப்பருப்பு ரெசிபிகளை சேர்த்து கொள்ளலாம்.

நம் சமையலறையில் நாம் அதிகம் பயன்படுத்தும் பருப்புகளில் பாசிப்பருப்பும் ஒன்று.  பக்கோடா, அல்வா, சூப் போன்ற ரெசிபிகளின் தயாரிப்பில் பாசிப்பருப்பிற்கு பெரும்பங்கு உண்டு.  பாசிப்பருப்பில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் புரதம் அதிகமாக இருக்கிறது.  வீகன் உணவுகளில் பாசிப்பருப்பும் ஒன்று.   நம் தசைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் புரதம் முக்கிய தேவை என்பதால் உணவில் அடிக்கடி பாசிப்பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.  உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் பாசிப்பருப்பை சாப்பிடுவதால் செரிமானம் சீராக இருக்கும்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனை கட்டுப்படுத்தி, உங்களை நிறைவாக வைத்திருக்கும் இந்த பாசிப்பருப்பை கொண்டு எப்படி ஹெல்தியான ரெசிபியை தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  idds42loபுரதத்தை உணவில் சேர்த்து கொள்ள சரியான நேரம் காலை.  காலை உணவிற்கு நீங்கள் புரதத்தை எடுத்து கொள்வதால் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடிகிறது.  காலை உணவை தவிர்ப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது.  மேலும் காலை நேரத்தில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மதிய உணவின் அளவு குறைகிறது.   வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் போன்றவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.  பாசிப்பருப்பை சில மணி நேரங்களுக்கு முன்பே ஊற வைத்து கொள்ளவும்.  பின் இதனை வேகவைத்து நறுக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து ஆம்லெட் போல செய்து சாப்பிடலாம்.  உங்கள் ருசிக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.  இதில் புரதம் நிறைந்திருப்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  MoongProtein

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement