டோஸ்டட் ஆல்மண்ட் க்ரானோலா சாப்பிட்டிருக்கிறீர்களா??

100 கிராம் ஓட்ஸில் 389 கலோரிகள் மற்றும் 11.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. 

   |  Updated: May 20, 2019 17:44 IST

Reddit
Weight Loss-Friendly Breakfast Recipe: Fibre And Protein-Rich Toasted Almond Granola (Video)
Highlights
  • உடல் எடை குறைக்க நார்ச்சத்து மற்றும் புரதம் சாப்பிட வேண்டும்.
  • க்ரானோலா பாரில் கலோரிகள் அதிகம்.
  • டோஸ்டட் ஆல்மண்ட் க்ரானோலா தயாரிப்பது மிகவும் எளிமையானது.

 காலை உணவை தவறாமல் சாப்பிட்டால் மட்டுமே, அன்றைய நாள் முழுவதுமே உற்சாகமாக இருக்க முடியும்.  காலை உணவில் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.  கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.  முட்டை, பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை காலை உணவாக சாப்பிடலாம்.  இதில் செயற்கையான ஃப்ளேவர், இனிப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்டிருக்கும்.  இதனால் உடல் எடை அதிகரிக்கும்.  அதனால் மார்க்கெட்டுகளில் கிடைப்பவற்றை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியம் நிறைந்த க்ரானோலா பார் தயாரித்து சாப்பிடலாம்.  இதில் வறுத்த ஓட்ஸ் சேர்க்கப்படுவதால் நார்ச்சத்து மிகுதியாக இருக்கும்.  மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 

Newsbeepஉடல் எடை குறைக்க:

ஓட்ஸில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கிறது.  100 கிராம் ஓட்ஸில் 389 கலோரிகள் மற்றும் 11.6 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.  மேலும் 16.9 கிராம் புரதம், வைட்டமின், மினரல், கால்சியம், பொட்டாஷியம் மற்றும் மக்னீஷியம் ஆகியவை இருக்கிறது.   ஓட்ஸில் நார்ச்சத்து இருப்பதால் நாள் முழுக்க நிறைவாக வைத்திருப்பதோடு, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  பொட்டாஷியம் உடலில் சோடியத்தால் உண்டாகும் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  100 கிராம் ஓட்ஸில் 429 mg பொட்டாஷியம் இருப்பதால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கிறது.  ஓட்ஸுடன் நட்ஸ், சியா விதைகள் மற்றும் பாதாம் சேர்த்து சாப்பிடலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

எப்படி தயார் செய்வது?

ஓட்ஸ், பாதாம், முலாம்பழம் மற்றும் தர்பூசணி விதை, சியா விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு பேக்கிங் ட்ரேயில் போட்டு 45 நிமிடங்கள் 150 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும்.  பின் அவற்றை ஒரு பௌலில் மாற்றி அதில் தேன் மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து பின் மீண்டும்  15 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும்.  பின் காலை மற்றும் மாலை நேர பசியின் போது சாப்பிடலாம்.  உடலுக்கு ஆரோக்கியம் தந்து உடல் எடையையும் குறைக்கும் இந்த ப்ரோட்டீன் பாரை வீட்டில் செய்து பாருங்கள்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement