பிரியங்கா சோப்ராவின் “ஷாதி கா லட்டூஸ்”

एनडीटीवी फूड  |  Updated: November 23, 2018 18:44 IST

Reddit
Bride-To-Be Priyanka Chopra's Parisian 'Shadi Ka Ladoos' Come In Multiple Colours! (See Pics)

உலகம் முழுவதிலிருந்தும் தன் ரசிகர்களால் மகிழ்ச்சியான மணமகள் என்றும் கருதப்படும் பிரியங்கா சோப்ரா நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான நிக் ஜோன்ஸுடன் மனம் முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வு நவம்பர் 31 முதல் டிசம்பர் 2 வரை நடக்க இருக்கிறது. தற்போது பிரியங்கா சோப்ரா தில்லியில் “The sky is pink” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தவர் திடீரென பாரிஸ் விரைந்தார். பின் அங்கிருந்து தன் சக நடிகர்கள் மற்றும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும் சில பரிசுகள் பிரியங்காவால் அனுப்பப்பட்டது.

”The Sky is Pink” படக்குழுவினரான ஃபர்ஹான் அஃடார் மற்றும் ஈகா லஹானி இருவரும் பாரிஸில் இருந்து தங்களுக்கு அனுப்பப்பட்ட கலர்ஃபுல் மக்கரூன்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். பிரியங்கா சோப்ராவின் காஸ்ட்யூம் டிசைனரான ஈகா லஹானி, மைசன் லௌட்ரீ ப்ராண்டின் இந்த கலர்ஃபுல் மக்கரூன் புகைப்படத்தை பதிவேற்றி “shadi ke ladoos” என்று குறிப்பிட்டிருந்தார். இதே பிராண்ட் மக்கரூன் தான் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேதாவின் திருமண நிகழ்வின் போது பரிமாறப்பட்டது. இந்த கலர்ஃபுல் மக்கரூனின் புகைப்படத்தை பதிவேற்றி அதில் பிரியங்கா சோப்ராவிற்கு நன்றி தெரிவித்திருந்தார் லஹானி.

bvfrev38
sj9j2ldg
vodt9rug
4g87o1b8

பிரியங்கா சோப்ரா தன் படக் குழுவினரை பெரியளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பதனையும் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பிரியங்கா எப்போதும் தவறுவதில்லை என்றும் ஃபர்ஹான் அஃடார் தெரிவித்துள்ளார். இந்த கலர்ஃபுல் மக்கரூனின் சுவை அலாதியானதாக இருக்கும் என்பது அதன் தோற்றத்தை வைத்து கணிக்க முடிகிறது. மேலும் திருமணத்தின் போதும் இந்த மக்கரூன்கள் விருந்தினருக்கு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. சந்தோஷ வானில் சிறகடித்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவின் திருமண கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement