ப்ரொக்கோலி லாட்டே: புது வகை 'காய்கறி காபி'

   |  Updated: June 14, 2018 22:24 IST

Reddit
Broccoli Latte: This 'Vegetable Coffee' Promises To Be A Major Food Trend This Year
Highlights
  • காபி வகைகளில் புதிய என்ட்ரியாக ப்ரொகோலி காபி அறிமுகம்
  • ப்ரொக்கோலி லாட்டேயில் பொடி செய்யப்பட்ட ப்ரொக்கோலி சேர்க்கப்படுகிறது
  • • ப்ரொக்கோலி காபி ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது


 ப்ரொக்கோலி லாட்டே: புது வகை 'காய்கறி காபி' இந்தாண்டின் ட்ரெண்டிங் உணவாக மாறப்போகிறது
 காபி காதலர்கள் அதிகம் இருக்கும் இந்த உலகில், விதவிதமான காபி வகைகள் புதுமையான ருசிகளில், வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரையிலும் காளான் காபி, முட்டை காபி, வெண்ணெய் காபி, என வகையான காபிகள் கேள்விபட்டிருப்போம், ஆனால், காபி உலகிற்கு வர இருக்கும் இந்து புது வகையான காபியின் பெயர் ப்ரொக்கோலி காபி! அதிக ஊட்டச்சத்து மிக்க ப்ரொக்கோலி காய்கறிகள் பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது.ம் அதனால், காபியிலும் ப்ரொக்கோலியை சேர்த்துவிட்டனர்.
ட்ரெண்டியான இந்த காபியை தயாரிக்க, பிரொக்கோலி பொடியை காபியில் தூவுகின்றனர்.  உடலுக்கு ஆரோக்கியமான ப்ரொக்கோலி காபியை ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் மையம், காம்ன்வெல்த்  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மக்கள் அதிகம் காய்கறி உண்ண வேண்டி, இந்த புது முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். “மூன்றில் இரண்டு பங்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இளம் வயது தாண்டியவர்கள் காய்கறிகள் உண்பதில்லை என ஆய்வில் தெரியவந்தது. ப்ரொக்கோலியில்  புரதச்சத்து,நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இந்த புது முயற்சியை உருவாக்கினோம்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ப்ரொக்கோலி பொடி மிகவும் ஆரோக்கியமானது. இரண்டு தேக்கரண்டி ப்ரொக்கோலி பொடியில், தினசரி எடுத்து கொள்ளப்படும் காய்கறிகளின் ஐந்தில் ஒரு பங்கு ஊட்டச்சத்து கொண்டுள்ளது. “உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உணவுகள் வீணாகின்றன. எனவே, ப்ரொக்கோலி போன்ற ஊட்டச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை பொடியாக சாப்பிட்டால், உணவு வீணாவதை குறைக்கலாம்” என்றனர்.
ப்ரொக்கோலி காய்கறிகளை காய வைத்து, அரைத்து, பொடியாக தயாரிக்கப்படுகிறது.  உடலுக்கு தேவையான புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நிறைந்தது. புற்று நோய் வரும் ஆபத்தை குறைக்கும் குணமுடையது.

Commentsபொடி செய்யப்பட்ட காய்கறி வகைகளை காபியில் சேர்த்து குடிப்பது மக்களுக்கு பழக்கம் உண்டாகுமா என தெரியவில்லை. ஆனால், முன்னொரு காலத்தில் மேற்கு நாடுகளில் காபுச்சினோ, சூப், சாலட், ஸ்மூத்தீஸ் ஆகிய அனைத்திலும் மஞ்சள் பொடி சேர்த்து சாப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement