மனச்சிதைவை குறைக்கும் ப்ரோக்கோலி - ஆய்வு சொல்லு தகவல்

ப்ரோக்கோலியின் தண்டுகளில் மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான தன்மை உள்ளது.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: May 14, 2019 15:54 IST

Reddit
Broccoli May Help Fight Schizophrenia: Study

மனச்சிதைவு நோய்க்கு (schizophrenia) எதிரான போராட்டத்திற்கு மிகவும் உதவுவதாக தெரிவிக்கிறது.

ப்ரோக்கோலி உலகம் முழுவதும் இதை சூப்பர் ஃபூட் என்று அழைக்கின்றனர். பச்சை நிறக் காய்கறியான இதை சூப்கள், சாலட்கள், பீட்ஸா, பாஸ்தா ஆகியவற்றில் பயன்படுத்துகிறார்கள். ப்ரோக்கோலி குறைந்த கலோரியும் அதிகளவு நார்ச்சத்தும் ஆன்டியாக்ஸிடன்ஸும் நிறைந்தது. இதில் உள்ள அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன. உடல் எடையை பராமரிக்க மிகவும் உதவுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்று மனச்சிதைவு நோய்க்கு (schizophrenia)  எதிரான போராட்டத்திற்கு மிகவும் உதவுவதாக தெரிவிக்கிறது. ப்ரோக்கோலியின் தண்டுகளில் மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான தன்மை உள்ளது. இந்த ரசாயன ஏற்றத்தாழ்வுகள் ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்புடையதாக உள்ளது.  உளவியல் சிக்கலில் முதல் கட்டத்தில் உள்ள 81 பேரை ஆய்வுக்குட்படுத்தினார்.

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த ஆய்வில் 22 வயதுடைய 58 சதவீத ஆண்கள் கலந்து கொண்டனர். இவர்களை சோதனைக்குட்படுத்தியதில் மூளையின் குளுடமேட் ட(glutamate) பகுதியில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. குளுடமேட் மூளையின் செல்கள் செய்திகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இருப்பு அல்லது இல்லாமை ஆகியவற்றிற்கு இடையே செய்திகளை கடத்தவும் மனசோர்வுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளுடமேட்  அளவு குறையும் போது அது மனச்சிதைவுக்கான கூறுகள் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனச்சிதைவுகான அறிகுறிகளை தடுக்க, அல்லது தாமதப்படுத்த அல்லது குறைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement