Vegan உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா..? - நிபுணர்கள் கூறுவது என்ன..?

டைப் 2 நீரிழிவு உணவு : வீகன் உணவுகள் சர்க்கரை அளவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

एनडीटीवी  |  Updated: October 23, 2019 18:33 IST

Reddit
Vegan Diet: Can Vegan Diet Reverse Type 2 Diabetes? Know The Answer From Our Expert

Diabetes diet: ஒருவர் வீகன் உணவுக்கு மாறினால், அவர் உடல் பருமன் குறைந்து, நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில்லே கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன.

Highlights
  • வீகன் உணவில் காய்கறிகள்,தானியங்கள்,பழங்கள், நார்ச்சத்து நிறைந்திருக்கும்
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
  • vegan - இறைச்சி, பால் மற்றும் விலங்குகளால் பெறப்பட்ட உணவுகள் உள்ளடங்காது.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான சைவ உணவு : கடந்த 30 ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உலகளவில் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமான பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க சைவ உணவு உதவும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா கலாசார ரீதியான மாற்றத்தைப் பார்த்து வருவதால், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. கட்டுப்பாடற்ற மற்றும் நீண்ட நீரிழிவு நோயினால், மைக்ரோ மற்றும் மேக்ரோ-வாஸ்குலர் (micro and macro-vascular) சிக்கல்கள் ஏற்பட்டு, மாரடைப்பு, இறுதி-நிலை சிறுநீரக நோய் (ஈ.எஸ்.ஆர்.டி) மற்றும் lower extremity amputations போன்ற நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும். நீரிழிவு ஒரு வாழ்க்கை முறை கோளாறு. எனவே வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே அதன் நிர்வாகத்தில் முக்கிய காரணியாகும்.

வீகன் உணவு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வாறு உதவும்..?

இந்தக் கட்டுரையில், வீகன் உணவு டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க உதவும் என்பதைப் பற்றி பேசப்படுகிறது. குறைந்த கொழுப்பு, குறைந்த glycaemic index வீகன் உணவுகள் கிளைசெமிக் கட்டுப்பாட்டை பெரிய அளவில் மேம்படுத்துவதாக அறியப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக நார்ச்சத்துள்ள பச்சை உணவுகள் கொழுப்பைக் குறைத்தல் மற்றும் postprandial glycaemia-வை குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று அறியப்படுகிறது.
 

8qsjip1

Vegan diet என்பது அதிக நார்ச்சத்துடை பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கியவை

Photo Credit: iStock

Also read: Is Vegan Diet Good For Your Health? Know The Tips For Beginners By Nutritionist

வீகன் உணவில் அதிக உணவு நார்ச்சத்து கொண்ட காய்கறிகள், தானியங்கள், பழங்கள் ஆகியவை, கொலஸ்ட்ரால் குறைப்பு, சிறுநீரில் குளுக்கோஸின் இழப்பைக் குறைத்தல், postprandial glycaemia-வை குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

தாவர அடிப்படையிலான தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் போன்ற உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை. இந்த உணவுகள் நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மாறாக, இறைச்சி, முட்டை, கோழி மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்குகளை உள்ளடக்கிய பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) அதிகம் என்று அறியப்படுகின்றன. அவை இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

அனைத்துண்ணிகளின் உணவுடன் (omnivorous diet) ஒப்பிடும்போது, வீகன் உணவு ​​குறைந்த சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள், ஸ்டார்ச் அல்லாத பாலிசாக்கரைடுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன (non-starch polysaccharides and polyunsaturated fats).

Also read: Vegan Diet: 5 Foods That Can Aid Quick Weight Loss

வீகன் உணவு நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளின் தேவையைக் குறைக்கிறது. இந்த சூழ்நிலையில், இரத்தச் சர்க்கரைக் குறைவை தவிர்க்க மருந்துகள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு, டோசேஜின் அளவையும் அதற்கேற்ப சரிசெய்ய வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இன்சுலின் மற்றும் வாய்வழி இரத்தச் சர்க்கரைக் குறைக்கும் ஏஜண்டுகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை வீகன் உணவுகள் குறைக்கிறது.

வீகன் உணவுகள் சர்க்கரை அளவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இன்சுலின் தேவையைக் குறைக்கிறது. இன்சுலின் குறைவதால் குறிப்பிடத்தக்க எடை இழப்பை ஏற்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிக்கு கூடுதல் நன்மையாகும்.

2fnl2h3o

Vegan diet இரத்த சர்க்கரை அளவைக் குளைக்க உதவும்.
Photo Credit: iStock

ஒருவர் வீகன் உணவுக்கு மாறினால், அவர் உடல் பருமன் குறைந்து, நீரிழிவு நோயை ஆரம்ப நிலையில்லே கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன. ஏற்கெனவே கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளிகளில், இந்த உணவு மாற்றங்கள் சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும், இதனால் நீரிழிவு தலைகீழ் செயல்முறைக்கு உதவும்.

Also read: 6 Plant-Based Sources Of Protein For Vegans And Vegetarians

(Dr Pramod Tripathi, an MBBS from BJ Medical College, Pune, is founder of Freedom from Diabetes)

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement