உடல் எடை குறைய வேண்டுமா? காலிஃப்ளவர் சாப்பிடுங்க!

Sakshita Khosla  |  Updated: December 11, 2018 14:29 IST

Reddit
Cauliflower Diet For Weight Loss: All You Need To Know About This Keto-Friendly Diet

காலிஃப்ளவரில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கீடோ டயட்டில் இந்த காய் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மிக குறைந்த அளவே கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் எடை குறைப்பில் காலிஃப்ளவருக்கு முக்கிய பங்கு உண்டு. உருளைக்கிழங்கு, கோதுமை மற்றும் அரிசி ஆகிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு பொருட்களுக்கு பதிலாக காலிஃப்ளவர் உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும் வைட்டமின் பி, கே, சி, ஃபோலேட், மக்னீஷியம், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. காலிஃப்ளவரை உணவில் எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம்.

உடை எடை குறைக்க:

கலோரி குறைவு

அமெரிக்க ஆய்வின்படி 100 கிராம் காலிஃப்ளவரில் 25 கலோரிகள் உள்ளது. உடலுக்கு ஏற்ற கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளில் சிறந்தது இந்த காலிஃப்ளவர். தினசரி காலிஃப்ளவரை உணவில் சேர்த்து கொள்ளும்போது உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைத்து கொண்டே இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்தது

100 கிராம் காலிஃப்ளவரில் 2 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் நீங்கள் நாள்முழுவதும் நிறைவாக இருப்பதாக உணர்வீர்கள்.

ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக இருக்கும்

காலிஃப்ளவரில் இரண்டு வகையான நார்ச்சத்து இருக்கிறது. இதனால் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இது உங்கள் ஜீரணத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

gobhi 65
 

 

உடலை ஹைட்ரேட் செய்யும்

100 கிராம் காலிஃப்ளவரில் 92 கிராம் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது உடலை ஹைட்ரேட் செய்யும். நீர்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும்.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

காலிஃப்ளவரில் வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் நிறைந்திருக்கிறது. நீண்ட நாள் ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின்படி காலிஃப்ளவர் உட்கொள்ளலாம். அதிகபடியாகவும் இதனை உணவில் சேர்த்து கொள்ள கூடாது.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement