தாத்தா பாட்டிகள் தினம் - இப்படி ஒரு ட்ரீட் கொடுத்து அன்பு செலுத்தலாமே

நாளை காலை 12 முதல் 3.30 மணி வரை, தாத்தா, பாட்டிகளுக்கென சிறப்பு பஃபே ஒன்றை, தி ஃபிளையிங் எலிபேன்ட் ரெஸ்டாரென்ட்டில் ஏற்பாடு செய்துள்ளது பார்க் ஹையாத்

NDTV Food  |  Updated: September 08, 2018 13:16 IST

Reddit
Celebrate Grandparent’s Day this Sunday at The Flying Elephant, Park Hyatt Chennai

தந்தையையும், தாயையும் கொண்டாட தினம் இருக்கிறது. ஆனால், தாத்தா, பாட்டிகளைக் கொண்டாட ஒரு நாள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப் படுகிறாது. இந்த ஆண்டு, நாளை செப்டம்பர் 9-ம் தேதி தாத்தா, பாட்டிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நமக்கு ஆசையும், அன்பும் ஊட்டி வளர்த்த தாத்தா, பாட்டிக்களை கொண்டாட வேண்டாமா? அதற்காகவே சிறப்பாக ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது சென்னை பார்க் ஹையாத் நட்சத்திர ஹோட்டல்.

நாளை காலை 12 மணி முதல் 3.30 மணி வரை, தாத்தா, பாட்டிகளுக்கென சிறப்பு பஃபே ஒன்றை, தி ஃபிளையிங் எலிபேன்ட் ரெஸ்டாரென்ட்டில் ஏற்பாடு செய்துள்ளது பார்க் ஹையாத். தாய்க்கும் தந்தைக்கும் மேலாக இருந்து உங்களை தாலாட்டி, சீராட்டிய தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இந்த நாளில் அன்புக் கடனை திரும்ப செலுத்த நினைப்பவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு சிறப்பான விருந்தை பரிசளிக்கலாம். அதுமட்டும் அல்ல, நாளை சுட்டி குட்டீஸ்களுக்கு சிறப்பு பரிசுகளும் உண்டு.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement